Sunday, July 21, 2013

கிராமத்து மாந்தோப்பு வாசனை எப்படி இருக்கும் ?!

சின்ன பிள்ளையில் காற்றோடு பெய்யும் முதல் மழை எப்போடா வெறிக்கும் என்று ஆவலாக காத்திருப்போம், மழை நின்றவுடன் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் நாங்க சிட்டாக பறந்து ஓடுவது மாந்தோப்புக்குதான்.

ஏனெனில் காற்றிலும் மழையிலும் அசைந்து மாங்காய்கள் கீழே விழுந்து கிடக்கும் அதை பொருக்கத்தான் இந்த ஓட்டம், அந்த மழையில் மாந்தோப்பின் மணம் இருக்கே...கோடி கொடுத்தாலும் மிகையாகாத மணம்...!
துளி துளியாக சொட்டும் மாமரத்தின் மழைநீர் அடடா தேகத்தில் சொட்டும் போது கிடைக்கும் சுகம் இருக்கே..... சொல்லி மாளாது, முதல் மழையில் விடைத்து கோபத்தில் எழும் பாம்புகளின் கோபம், எங்களைக் கண்டதும் அதுகள் ஓடும் வேகத்துலேயே புரியும்...!

இப்பிடித்தான் ஒருநாள் ஒரு மழை நாளின் போது, மாங்காய் பொருக்க ஓடினேன், மாங்காய்கள் பொருக்கி முடிந்ததும் இன்னும் எங்கேயாவது கிடக்கிறதா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

ஒரு சிறிய புதரினுள் ஒரு பெரிய விடலை மாங்காய், அதுவரை யார் கண்ணிலும் படவில்லை, அதைப்போல கண்ணைக் கவர்ந்த மாங்காய் எனக்கு கிடைக்கவும் இல்லை.
மனதில் சந்தோசம் புரையோட அக்கம் பக்கம் சுற்றி பார்த்தேன் எல்லாருமே போய்விட்டார்கள்....ஆஹா எனக்கே எனக்கா என்று அப்படியே நின்று அழகு பார்த்தேன் சற்று நேரம்.

சரி எடுப்போம் என்று குனிந்து எடுக்கவும் சடேரென்று ஒரு பாம்பு என்மீது பாய்ந்து தாவி ஓடியது.....!

இனி நீங்களே சொல்லுங்க முதல் மழைக்கு இனி மனோ மாங்காய் பொருக்க போவான்  போவான் போவான் போவான் ???
அடுத்த மழையும் வந்தது.......மழை நின்றதும் எல்லா வீட்டிலிருந்தும் பசங்க மாந்தோப்புக்கு ஓட.......நான் போகாமல் வாசலில் நின்று கொண்டிருந்ததை எங்க அம்மா பார்த்தாங்க.

என்னை தோளோடு கட்டி பிடித்தபடி "என்ன தம்பி நீ போகலையா மக்ளே [[மகனே]] ?

"போகலைம்மா எனக்கு மாங்காய் பிடிக்கலை [[மாங்கான்னா எனக்கு உசுருன்னு பெத்தவளுக்கா தெரியாது ?]]"

"எலேய் தம்பி.....பாம்பு பார்த்தியோ மக்ளே...?" [[அம்மான்னா அம்மாதான் போங்க...!]]

"ஆமாம்மா....பெரிய பாம்பு, அப்பிடியே என்மேல ஜம்ப் பண்ணி ஓடிச்சும்மா நல்லவேளை கடிக்கல..."
" அந்த பாம்புகள் ஒன்னும் கடிக்காதுலேய் தம்பி, மாறாக நம்மளை கண்டதும் பயந்து ஓடிவிடும் அதனால பயப்படாமல் போயி மாங்காய் பொருக்கி சாப்பிடு என்ன..."

அம்மா சொன்னா தைரியத்துக்கு கேக்கவா வேணும் ? ஓடினேன் பாருங்க....அன்னைக்குதான் எல்லா நாட்களையும் விட கூடுதலாக மாங்காய் பொருக்கி வந்தேன்....!


11 comments:

  1. ரசித்தேன் - அம்மாவின் தைரியத்தையும்...

    ReplyDelete

  2. எனக்குதான் முதல் மாங்காய் இன்று

    ReplyDelete
  3. நினைவலைகள் என்றுமே சுகமானவை

    ReplyDelete
  4. அங்க ஏன் பொண்ணு அடிச்சு வக்காமா அதுஒன்னும் பன்னதுன்னு தைரியம் கொடுத்த உங்கள் அன்னை வீரத்தாய்தான்
    இம்புட்டு வீரம் உங்களுக்கு எப்படி வந்ததுன்னு இப்ப இல்ல தெரியுது .

    ReplyDelete
    Replies
    1. /அங்க ஏன் போன? ன்னு கேட்டு அடிச்சு வைக்காம அது ஒண்ணும் பண்ணாதுன்னு தைரியம் கொடுத்த உங்கள் அன்னை வீரத்தாய்தான்
      இம்புட்டு வீரம் உங்களுக்கு எப்படி வந்ததுன்னு இப்ப இல்ல தெரியுது //

      Delete
  5. ஆமா மாந்தோப்பு காவல்காரன்லா கிடையாதா :-)

    ReplyDelete
  6. ரசிக்கும்படி உள்ளது, கடந்த கால மாங்காய் திருடிய ஞாபகம் மனதில் ஊஞ்சலாடுகிறது... அழகாய் உள்ளது....

    ReplyDelete
  7. அம்மா... கொடுத்த தைரியம்... ம்.. மாம்பழம் இப்போ ஊரில் சீசன்... நமக்குத்தான் சாப்பிட கொடுத்து வைக்கலை...

    ReplyDelete
  8. சுகமான நினைவலைகள்... நெய்வேலியில் வீட்டுக்கு வீடு மாமரங்கள் என்பதால் மழை நின்றவுடன் வீட்டுடன் இருக்கும் தோட்டத்திற்குச் சென்று எடுத்து வருவோம். மற்ற நாட்களில் மரத்தில் ஏறி பழுத்த பழங்களாகப் பார்த்து அங்கேயே சாப்பிடுவதும் உண்டு....

    எனது நினைவலைகளையும் மீட்டெடுத்தது உங்கள் பகிர்வு.

    ReplyDelete
  9. திருட்டு மாங்காய்க்கு தனி ருசிதான்....!!!
    அதை யாராலும் மறுக்க முடியாது.....

    ReplyDelete
  10. நான் மாந்தோப்பில் நின்று இருந்தேன் அவள் மாம்பழம் வேணும் என்றாள் என்று டூயட் பாடவில்லைத்தானே:)) மாம்பழ அனுபவம் சுவையூட்டுகின்றது தாய்ப்பாசத்தையும் தான்!

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!