Saturday, September 3, 2011

கண்ணீர் குடித்து தாகம் தீர்.....!

கடல் தாண்டி வந்தியா
ஆசாபாசங்களை
பெட்டியில் வைத்துப் பூட்டு....
பிரிவின் மனவலியை
மறைத்து வைத்து
இன்முகம் காட்டு...
கண்ணில் சுரக்கும்
கண்ணீரை அடிக்கடி
பாத்ரூம் போயி கழுவு...
கைபேசியில் ஒப்பாரி வைக்கும்
மனைவிக்கும் குழந்தைக்கும்
பயந்து ஒளியும் கைபேசி...
நண்பர்கள் ஆறுதல் கூறும் போது
இன்னும் கூடுதலாக
மனம் அழுகிறது...
காலம் கோலம்
எது மாறினாலும்
முதலாளிகள் மாறப்போவதில்லை...
கண்ணீரை நெகிழ்ந்து
கதறலை அமிழ்ந்து
மனதை ஒளித்து வைத்துக்கொள்...
இந்த கண்ணீருக்கு
மட்டும் ஒரு
சங்கம் இல்லை....
இருந்தால் உலகம்
தாங்காது எனவேதான்
ஞானிகள் யாரும் யோசிக்கவில்லை...
ஏ சமுத்திரமே
எத்தனை முறைதான் உன்னை
கடந்து செல்வது, கண்ணீர் குடித்து தாகம் தீர்...
கண்ணீர் பழகிவிட்டது
பிரிவுகள் வழக்கமாகி விட்டது
எல்லாமே மாயையாகவே தெரிகிறது....


பாஸ்போர்ட், விசா இல்லாத
உலகம் வேண்டும்
யாதும் ஊரே யாவரும் கேளிர் என......!


டிஸ்கி : படங்கள் யாவும் நான் வேலை செய்யும் ஹோட்டல் மேலிருந்து எடுத்தது.


39 comments:

  1. மும்பைய விட்டு பறந்தாச்சா???

    ReplyDelete
  2. ஹோட்டல் மேலே எடுத்ததா ,அப்போ ஹோட்டல் கீழே இருந்து எடுக்கலயா

    ReplyDelete
  3. ஆமினா said...
    மும்பைய விட்டு பறந்தாச்சா??? //



    ஆமாங்கோ....

    ReplyDelete
  4. சி.பி.செந்தில்குமார் said...
    ஹோட்டல் மேலே எடுத்ததா ,அப்போ ஹோட்டல் கீழே இருந்து எடுக்கலயா//

    எலேய் அண்ணா என்னா நக்கலாடா ராஸ்கல்.....

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மனோ.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

    ReplyDelete
  6. சொந்த ஊரின் பிரிவு வேதனையை உங்கள் அனுபவம் உணர வைக்கிறது ....

    ReplyDelete
  7. Rathnavel said...
    வாழ்த்துக்கள் மனோ.
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html //



    நன்றி அய்யா.....

    ReplyDelete
  8. koodal bala said...
    சொந்த ஊரின் பிரிவு வேதனையை உங்கள் அனுபவம் உணர வைக்கிறது ....//


    கவலையான உலகமய்யா...

    ReplyDelete
  9. //நண்பர்கள் ஆறுதல் கூறும் போது
    இன்னும் கூடுதலாக
    மனம் அழுகிறது...// என்ன சொல்ல? :-(

    ReplyDelete
  10. //பாஸ்போர்ட், விசா இல்லாத
    உலகம் வேண்டும்
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என......!//
    அருமை மனோ!

    ReplyDelete
  11. பிரிய மனமில்லாவிடினும் பிரியத்தானே வேண்டியிருக்கிறது மக்கா! என்ன செய்வது...

    ReplyDelete
  12. வலிகள் தெரியுது,,,நேற்று பேஸ் புக்கில் பார்த்தேன் கொஞ்சம்!

    ReplyDelete
  13. நோ நோ செண்டிமெண்ட்
    ஸ்டார்ட் மியூசிக்
    தனனே தானானே:)

    ReplyDelete
  14. ஆமாம் இது எந்த ஏரியா அண்ணே ஹித்தா மீனாசல்மானா

    ReplyDelete
  15. உங்க மனக்கஷ்டத்தை அழகான கவிதையில சொல்லியிருக்கீங்க. படிக்கும் எங்களுக்கே கஷ்டமா இருக்கு,அனுபவிக்கும் உங்கள் வேதனையை உணரமுடிகிறது.

    ReplyDelete
  16. அண்ணே அழுவாதீங்க கண்ணு துடசிக்கங்க....நாங்கல்லாம் இருக்கோம்ல...முடிஞ்சா மொராக்கோ காரிய நெனச்சிக்கங்க ஹிஹி!

    ReplyDelete
  17. உங்கள் கவிதைக் கண்ணீர் முத்துக்களில்
    என் நிலையையும் பார்த்தேன் மக்களே,
    அன்றோர் விக்கிரமாதித்தன்
    இன்றோ கோடானுகோடி விக்கிரமாதித்தர்கள்.
    அதில் நானும் ஒருவனே....
    வீட்டை விட்டு பிரிந்து வரும் அந்த நொடி...
    ஏட்டினில் எழுத முடியா சோகம்.....
    விமானம் தாய்நாட்டில் தரையிறங்கும் போது இருந்த
    மன குதூகலம்
    அயல்நாட்டில் பணி நிமித்தம் இறங்கையில்
    வற்றிப்போவது அடிக்கடி...
    என்ன செய்வது மக்களே...
    காலம் நம்மை செய்வித்த கோலம்
    அனுபவித்தே தீர வேண்டும்.

    கடல் நடுவில் நானிருக்கையில்
    சிலநேரம் அலைபேசி குறிகள் கிடைக்க வில்லையென்றால்
    மனம் பதறுவது .....
    வேண்டாம் நண்பா...
    இதோ நான் இன்னும் பத்து நாட்களில் தாயகம் செல்கிறேன்.
    மீண்டும் நீங்கள் தாயகம் வரும் நாளிற்காய்...
    உங்கள் குடும்பத்தில் ஒருவனாய்....
    இந்த நண்பனும்........

    ReplyDelete
  18. பிரிவுத்துயரை இத்தனை வலிமையாக
    எளிய வார்த்தைகளில் அனுபவிப்பவர்கள் அன்றி
    வேறு எவரும் கவிதையாக்குவதும் கடினம்
    நாம் ஆறுதல் சொல்லி தேற்ற முயல்வதும் கடினம்
    மனம் கனக்கச் செய்யும் பதிவு

    ReplyDelete
  19. கவலையை கவிதையாய் ஆக்கியிருக்கீங்க ..(

    ReplyDelete
  20. கடலுக்கு ஒப்புமை கவிதையின் தலைப்பு இலக்கியத்தரம் மனோ!

    ReplyDelete
  21. அண்ணே படங்கள் சூப்பர் அண்ணே
    உங்கள் கைவண்ணம் அசத்தலா இருக்கு ஹீ ஹீ ( அந்த பக்கம் ஏதும் பிகருங்க போகல்லையா)

    ReplyDelete
  22. குட்டி குட்டு சுவராசிய கவி சூப்பர் பாஸ்

    ReplyDelete
  23. ஏ சமுத்திரமே
    எத்தனை முறைதான் உன்னை
    கடந்து செல்வது, கண்ணீர் குடித்து தாகம் தீர்...

    அழுத்தமான வரிகள்.
    ஆழமான சிந்தனை

    அருமை நண்பரே.

    ReplyDelete
  24. சொந்த பந்தங்களை விட்டு விட்டு வெளிநாட்டில் வேலை செய்வோரின் உள்ளகுமுறலை வார்த்தைகளால் வடித்துள்ளீர்கள்..

    படித்ததும் மனம் கணத்துவிட்டது

    நட்புடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  25. எல்லாம் நல்லாயிருக்கு,,

    //பாஸ்போர்ட், விசா இல்லாத
    உலகம் வேண்டும்
    யாதும் ஊரே யாவரும் கேளிர் என//

    ஹ்ம்ம்ம்

    ReplyDelete
  26. வெளிநாட்டு வாழ்க்கையில் எல்லோருக்கும் இதே நிலைதான்,, என்ன செய்ய?

    ReplyDelete
  27. பிரிவின் வேதனை சொல்லும் கவிதை...
    என்ன செய்வது... பணம் தேடும் வாழ்வில் கண்ணீரே மிச்சம்...

    ReplyDelete
  28. வணக்கம் அண்ணாச்சி,
    கவிதையில் நீங்க தேறிட்டீங்க.

    உணர்வின் வலிகளுக்கு கவிதை மூலம் மருந்திட்டிருக்கிறீங்க பாஸ்,

    உறவுகளைப் பிரிந்து தூர தேசத்தில் வாழும் ஒருவனின் உணர்வுகளை அவனின் ஊரோடு இணைக்கும் உறவுப் பாலமாக உங்கள் கவிதை அமைந்துள்ளது.

    ReplyDelete
  29. கவிதையில் கவலையை வரவைத்துவிட்டீர்கள்!
    கைபேசியில் ஒப்பாரிவைக்கும் மனைவிக்கும்!

    கொன்னூட்டீங்க உணர்வுகளின் அற்புதமான வரிகள் மாப்பூ! வரவர உங்க பதிவைப்படிக்கும் போது இந்த நாட்டைவிட்டு மனைவியோடு போய்விடலாமோ என்று மனசு வலிக்குது அண்ணா! ம் என்ன செய்வது துயரங்கள் இப்படி வலையில் போகின்றது !

    ReplyDelete
  30. பிறந்த மண்ணை...உற்றார் உறவுகளை பிரிவது...கஷ்டம் தான்...எத்தனை முறையாயினும் ..எவ்வளவு வயசானாலும்...

    இன்னும் ஒரு வருஷம் தானே...அடுத்த முறை பிரிவதற்கு...

    ReplyDelete
  31. கொஞ்சநாளைக்கு அப்படித்தான்ணே இருக்கும்!

    ReplyDelete
  32. எலேய்ய் இனி மறுக்கா இப்படி அழுவாச்சி பதிவு போடறத பாத்தேன்.... பிச்சிபுடுவேன் பிச்சி.........

    ReplyDelete
  33. பாஸ்போர்ட், விசா இல்லாத
    உலகம் வேண்டும்////
    அழகிய வரிகள்

    ReplyDelete
  34. //ஆசா பாசங்களை
    பெட்டியில் வைத்துப் பூட்டு//

    யாரு தல அந்த ஆசா? அவங்க பாசங்களை நாங்க ஏன் பூட்டணும்?

    ReplyDelete
  35. //நண்பர்கள் ஆறுதல் கூறும் போது
    இன்னும் கூடுதலாக
    மனம் அழுகிறது.//

    என்ன ஓய் யாரது ஆறுதல் தறது ? பிச்சுபிடுவேன் பிச்சு :-)

    அழப்படாது ..சொல்லிட்டேன் ஆமா..!! அதுக்காக குளிக்காம , பல்லு விளக்காம வேலைக்கி வரப்பிடாது ஜாக்கிரதை :-))

    ReplyDelete
  36. படங்கள் வித்தியாசமாக இருக்கு.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!