Monday, September 19, 2011

கூடங்குளம் போராட்டம் வெற்றியை நோக்கி....!!!


கூடங்குளம் அணு மின் நிலையம் பிரச்னை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும், முதலவர் ஜெயலலிதாவும் தொலைபேசியில் பேசினர்.

அப்போது, பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சர் நாராயணசாமி கூடங்குளம் வருகை தர இருப்பதாக முதல்வரிடம் பிரதமர் தெரிவித்தார்.


இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை தொடர்பாக கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்த கடிதத்தில், தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில், அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு டெல்லிக்கு சென்று பிரதமரை சந்தித்து, கோரிக்கை மனு ஒன்றை அளிக்க இருப்பதாகவும், அதற்கு தேதி மற்றும் நேரத்தை ஒதுக்கி தரும்படியும் கேட்டுக்கொண்டார்.


மேலும், இந்த பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படும் வரையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் பணிகள் எதையும் மேற்கொண்டு தொடர வேண்டாம் என்றும் பிரதமரை முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தின் மூலம் கேட்டுக்கொண்டார்.


அந்த கடிதத்தை படித்த பின், பிரதமர் மன்மோகன் சிங் திங்கட்கிழமை மாலை சுமார் 6.30 மணி அளவில் முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.


அப்போது, முதல்வர் ஜெயலலிதா, இந்தியாவிலேயே அறிவில் சிறந்த முதல்வர் என்றும், இந்த பிரச்னை குறித்து அவரது வழிகாட்டுதல் தனக்கு தேவை என்றும் பிரதமர், முதல்வர் ஜெயலலிதாவிடம் கூறினார்.

அதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா பேசுகையில், சுமார் 100 பேருடன் ஆரம்பித்த போராட்டம், நாளுக்கு நாள் வளர்ந்து, தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இதில் பங்கு கொண்டுள்ளார்கள் என்று தெரிவித்தார்.


மத்திய இணையமைச்சர் நாராயணசாமி வருகை...


பின்னர் பிரதமர் மன்மோகன்சிங் தொடர்ந்து பேசும்போது, இந்த பிரச்னை தொடர்பாக, பிரதமர் அலுவலக மத்திய இணையமைச்சர் நாராயணசாமியை அனுப்பி வைப்பதாகவும், அவருக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்கும்படியும் கேட்டுக்கொண்டார்.


முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமியை கூடங்குளம் சென்று, அந்த பகுதி மக்களுடன் கலந்து உரையாடுமாறு கேட்டுக்கொண்டதுடன், ஏற்கனவே தனது கடிதத்தில் தெரிவித்தபடி, தமிழ்நாட்டு குழுவை பிரதமர் சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தரும்படி கேட்டுக்கொண்டார்.


அதற்கு பிரதமர் பதில் கூறுகையில், தான் ஐக்கிய நாடுகள் சபை கூட்டம் தொடர்பாக நியூயார்க் செல்ல இருப்பதாகவும், வரும் 27-ம் தேதி திரும்பி வந்தவுடன், அதற்கான நேரம் ஒதுக்கித் தருவதாகவும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசும்போது, அறிவில் சிறந்த முதல்வர் ஜெயலலிதா, இந்த பிரச்னை தொடர்பாக வழிகாட்டும்படி மீண்டும் கேட்டுக்கொண்டார். பிரதமரின் ஒத்துழைப்புக்கு முதல்வர் ஜெயலலிதா நன்றி தெரிவித்துக்கொண்டார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : விகடன். 

25 comments:

  1. இந்த போராட்டம் வெற்றி அடையட்டும் ..
    பங்கு கொள்ள முடியவில்லை என்ற ஏக்கம்தான் சார்

    ReplyDelete
  2. //கூடங்குளம் போராட்டம் வெற்றியை நோக்கி.//
    நல்ல தகவல். நன்றி.

    ReplyDelete
  3. நல்ல தகவல் சொன்னதுக்கு நன்றிண்ணே..சீக்கிரம் பேச்சுவார்த்தை ஆரம்பிச்சு, போராட்டம் முடிவுக்கு வரட்டும்.

    ReplyDelete
  4. தமிழ்மணம் இணைச்சு ஓட்டும் போட்டாச்சு..உங்களால இதை பதிலுக்கு செய்ய முடியுமா..அண்ணனுக்கு சவால்!!

    ReplyDelete
  5. இந்த விஷயத்தில் தி.மு.க வும், தமிழக காங்கிரஸும் மெத்தனமாகவும், மௌனமாகவும் உள்ளது.

    ReplyDelete
  6. போரட்டம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நல்ல செய்தி..
    போராட்டம் வெற்றி அடையட்டும்..

    ReplyDelete
  8. கண்டிப்பாக வெற்றி அடையும்...

    ReplyDelete
  9. நல்ல தகவல்.
    போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  10. வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இநத வெற்றி தமிழர்களுக்கு கிடைக்கும் வெற்றி...

    ReplyDelete
  12. நல்ல தகவல்.
    போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. இன்குலாப் ஜிந்தாபாத்

    ReplyDelete
  14. மக்கள் நலன் சார்ந்த போராட்டங்கள் எங்கும் வெல்ல வேண்டும். அதுவே, சமூகத்துக்கு நல்லது பாஸ்.

    ReplyDelete
  15. போராட்டம் வெற்றியடைய
    மனமுவந்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  16. தீபா செல்வன் said... Best Blogger Tips [Reply To This Comment]

    ஆரம்பிக்கும் போது விட்டு விட்டு இப்போது வேண்டான்னு சண்டைபோட்டா என்ன நடக்கும் இப்போ விட்டு விட்டு ஒரு வருஷம் கழித்து ஆரம்பிப்பாங்க ஆகா மொத்தம் நமது மெத்தன போக்கு நமக்கு ஆப்பாயிடிச்சு. ஜப்பான் சுனாமி க்கு அப்புறம் தான் நமக்கு விப்புணர்வு வந்திருக்கு.....///////////

    இல்லை நண்பரே ஆரம்பத்தில் இருந்து அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து கொண்டுதான் இருக்கிறார்கள் .
    ஜப்பான் சம்பவத்திற்கு பிறகு அவர்களுக்கு ஆதரவு பெருகி இருக்கிறது என்பதுதான் உண்மை ...
    புது விழிப்புணர்வு வெற்றி பெற வாழ்த்துவோம் .................

    ReplyDelete
  17. அண்ணன் மனோ நான் நீண்ட நாள் பிறகு வந்திருக்கேன் .. இன்று ஒரு பதிவு போட்டிருக்கேன் உங்கள் கருத்தை சொல்லவும் ...

    ReplyDelete
  18. நல்ல தகவல்....
    போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  19. உண்மைதான். போராட்டம் தீர்வை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. மேதா பட்கரின் வருகையும், ஜெயலலிதாவின் கடிதமும், பிரதமர் தேதி அளித்திருப்பதும் நம்பிக்கையூட்டுகிறது.

    ReplyDelete
  20. எல்லாமே நல்ல தகவல்கள் மனோ அண்ணே! பகிர்வுக்கு நன்றி!

    ஆமா, நம்ம ஏரியாவுக்கு வரமாட்டீங்களா?

    ReplyDelete
  21. நல்ல சந்தோசமான தகவல்....பாஸ்

    ReplyDelete
  22. ///தமிழ் உதயம் said... Best Blogger Tips [Reply To This Comment]

    இந்த விஷயத்தில் தி.மு.க வும், தமிழக காங்கிரஸும் மெத்தனமாகவும், மௌனமாகவும் உள்ளது.
    ////

    இந்த விஷயத்தில் மட்டுமா?

    ReplyDelete
  23. மாலை நான்கு மணியளவில், மத்திய அமைச்சர் கூடங்குளம் வந்துவிட்டார்.

    ReplyDelete
  24. மக்களின் உள்ளம் குளிரும் செய்தியினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

    நன்றி பாஸ்.

    ReplyDelete
  25. வெற்றி கிட்டட்டும்.

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!