Thursday, March 22, 2012

நள்ளிரவில் நாள்தோறும் போன் செய்து கலவரப்படுத்திய மர்ம மனிதன், குற்றம் நடந்தது என்ன...???

தொடரும் பயணங்கள்.....

ஆங் சொல்ல மறந்துட்டேன், ராத்திரி பனிரெண்டு மணிக்கு மேல் பிரபல பதிவர்களுக்கு போன் [[வெளிநாட்டுக்கும்]] போட்டு டார்சர் கொடுக்கும் நாய் நக்ஸ் அண்ணன் நக்கீரனுக்கு ராத்திரி பனிரெண்டரைக்கு போன் போட்டு டார்சர் கொடுக்க சொன்னார் ஆபீசர், ஏன்னா ஆபீசரையும் ராத்திரி போனை போட்டு படுத்தி இருக்கார்.

நக்கீரனுக்கு போனை போட்டு கிழி கிழி என கிழிச்சி காய்ச்சி எடுத்தோம், யோவ் என்னை உறங்க விடுங்கய்யா உறங்க விடுங்கய்யா என அவர் கதறியதை கேட்க காது ஆயிரம் வேண்டும், அன்றயோடு நள்ளிரவு போன் பண்றதில்லை அண்ணன்...!

காலை..................

வளைத்து வளைத்து போட்டோக்கள் எடுத்தோம், இந்த முறை என்னாச்சுன்னே தெரியலை ஆபீசர் கொஞ்சமாதான் போட்டோக்கள் எடுத்தார், மகள் பிறந்தநாள் அதுவுமா அவர் மாப்பிளை வீட்டுக்கு சாப்பிட வருவதாக இருந்த படியால் கொஞ்சம் துரிதமாகதான் இருந்தார்.

[[எலேய் மனோ இடுப்பை இன்னும் இறுக்கி பிடிச்சிக்கோ கீழே கீழே விழுந்துறபோரே]]

ஸ்பெஷலாக அங்கே காமராஜர் திறந்து வைத்த மணி மண்டபம் ஒன்று இருக்கிறது, அவளவு உச்சியில் அது அமைந்து இருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது, அதன் உச்சியில் ஏறி மலைகளை அருவிகளை எல்லாம் மிகவும் ரசித்தோம்....!

[[சுதன் : ச்சே இந்த பிளாக்கர்ஸ் தொல்லை தாங்க முடியலைடா சாமியோ]]

சூப்பராக சுட சுட டீ வந்தது பிளாஸ்கில் குடித்து பாத்ரூமை எல்லாம் நாசமாக்கினோம், கொண்டு வந்த பொருட்களை எல்லாம் காரில் ஏற்றி கிளம்பினோம், பிரிய மனசில்லாமல்......அகஸ்தியர் அருவி நோக்கி......!

[[சீக்கிரம் ஆபீஸருக்கு காப்பியை ஊற்றி கொடுத்துருவோம், இல்லைன்னா முன்பெல்லாம் பெல்ட் வச்சிகிட்டு சுத்திகிட்டு திரிஞ்சவர் இப்போ துப்பாக்கியை இடுப்புல சொருவிகிட்டு அலையுதாரு...]]

காரில் கீழே இறங்க இறங்க நாங்கள் எம்புட்டு தூரம் மலையில் ஏறி போயிருக்கொம்னு புரிஞ்சது, ராத்திரி போனபடியால் ஒன்னுமே தெரியவில்லை, பகல்லதான் எல்லாமே ரசித்து பார்க்க முடிந்தது...!

[[திவானந்தா : நான் போட்டுருக்குற இந்த மோதிரத்த பார்த்து மயங்கிருச்சு அந்த டாக்டர் [[ப;ஈனப்'ஓபன்'ஓபன்'ஊவ்னான்வ்'ம்]] ஃபிகர் நம்புங்க மனோ அண்ணாச்சி]]

அகஸ்தியர் அருவி பக்கம் காரை நிறுத்திவிட்டு குளிக்க கிளம்பினோம், போகும் வழியில் நீர் தேக்கம் போல இருந்த இடத்தில் சின்ன சின்ன மீன்கள் துள்ளி விளையாட விஜயன் போட்டோ எடுத்து கொண்டே வந்தார் அதில் கருப்பாக ஒரு மீன் வித்தியாசமாக இருக்கவே....

[[எப்பிடியோ மலைக்கு வந்துட்டோம் கீழே தள்ளி விட்றாமல் ஆபீசரை கட்டி பிடிச்சி ஐஸ் வச்சிருவோம்]]

ஆச்சர்யமாக பார்த்து கொண்டு இருந்த போது ஒரு ஆள் [[வனத்துறை ஊழியர்னு நினைக்கிறேன்]] வந்து அதைபற்றி சொன்னபோது ஆச்சர்யமாக இருந்தது...!

[[திடீரென சாமியாக அவதாரம் எடுத்த திவானந்தா சுவாமிகள்]]

போன பதிவில் அந்த மீனின் படம் போட்டு இருக்கேன் பார்த்துக்கோங்க, 

ஒரு தாயின் அரவணைப்பில் நானும் கே ஆர் விஜயனும்...!!!

அதாவது அதற்க்கு பெயர் கல் தவளையாம், நன்கு பெரிதாக வளர்ந்தபின், வால் பகுதியை கழட்டி விட்டுட்டு நேரே ஜம்ப் பண்ணி பாறையில் வந்து உக்கார்ந்து விடுமாம் அதுதான் அதற்க்கு கல் தவளைன்னு பெயராம்....!!!

[[கிடு கிடு மலை உச்சியில்]]

நன்றாக அருவியில் குளித்தோம், அருவி பக்கம் செருப்பை கழட்டி போட்டுவிட்டு குளிக்க சென்றால் கால் பயங்கரமாக வழுக்கியது எனக்கு, கவனித்த ஆபீசர் சுதனுக்கு சொன்னார், சுதன் மனோ கையை பிடிச்சுக்கொங்க கீழே விழுந்திரப்போறார் என்று....

[[அங்கே தூரத்தில் தெரிவது தலை அணை]]

ஆஹா பயங்கரமா வளுக்குதே, ஒரு ஐடியா பண்ணுனேன் செருப்பை போட்டுட்டே வந்து குளிப்போம்னு செருப்பை போட்டுட்டு குளித்தால் வளுக்கவே இல்லை, இந்த ஐடியாவை எல்லாரும் ஃபாலோ பண்ணுங்க ஆனால் செருப்புக்கு கேரண்டி கிடையாது.

[[அங்கே தெரியும் மலைக்கு அப்பால் மாஞ்சோலை எஸ்டேட்]]

அடிச்சு ஆடும் அருவியின் வேகத்தில் அவனவனுக்கு ஜட்டியே கழண்டு போறது தெரியாம நின்னுகிட்டு இருக்காயிங்க ஸோ செருப்பு போனா கிடைக்காது ஜாக்கிரதை....

[[குளிக்கலைன்னா அடிப்பாரோ ஆபீசர்..?]]

குளித்து முடித்து நம்ம திவானந்தா சாமியாராக தரிசனம் தந்து எல்லாருக்கும் லட்டு கொடுத்தார் நல்லவேளை அல்வா தரவில்லை, கார்பக்கம் வந்த விஜயன் அய்யய்யோ என் செருப்பை அருவிக்கரையில் மறந்து விட்டுட்டு வந்துட்டேனே என்று அலறி ஓடினார்.

[[கரணம் தப்பினால் மரணம் எனும் மலை முகட்டில் ஆபீசரும் திவானந்தாவும்.!!!]]

ஆனால் அவர் வேணும்னேதான் செருப்பை விட்டுட்டு வந்தாருன்னு அப்புறமாதான் தெரிஞ்சது, ஹா ஹா மறுபடியும் பலிகடா ஆக்கி அவரை காய்ச்சி பொங்க வைத்து மகிழ்ந்தோம், காரில் பறந்தோம் திருநெல்வேலி நோக்கி....

[[காமராஜர் திறந்து வைத்த மணிமண்டபத்தின் கூரையில் நானும் ஆபீசரும்]]

திவானந்தா சுவாமிகள் திடீரென அருள் வந்தவராக, நாம குளிச்சமே அந்த தண்ணீர்தான் பாவநாசத்துல அருவியா கொட்டுது, இன்னைக்கு மனோ அண்ணன் வேற குளிச்சிட்டாரூ அங்கே குளிக்கிற எவனுக்கேல்லாம் வியாதி வந்து சாகப்போறானோ தெரியலையே என்று திருவாய் மலர்ந்தார், விஜயன் கலவரமானார்.

[[அகஸ்தியர் அருவி...!!]]

காரில் வரும் வழியில் ஆபீசர் எல்லா இடங்கள் பற்றியும் விவரித்து கொண்டே வந்தார், ஆமா இங்கே காலை உணவு சாப்பிட நல்ல ஹோட்டல் எங்கே இருக்கு என்று பேச்சு வர, சரிய்யா வண்டியை நிறுத்தி கேட்டுருவோம்னு ஆபீசர் சொல்ல விசாரித்து கிளம்பினோம்.


அந்த ஹோட்டலின் பெயர் "தாய் ஹோட்டல்" சாப்பாடு அருமையாக இருந்தது நான் இட்லி சாப்பிட்டேன் ஆபீசர், விஜயன் பூரி பாஜி, திவானந்தா இட்லி, சண்முகபாண்டி பொங்கல்'ன்னு கலந்து கட்டி சாப்பிட்டு விட்டு மறுபடியும் பிரயாணம்.

[[ ம்ஹும் முந்தானை முடிச்சு பாக்கிராஜ் உக்காந்து இருக்கார் பாருங்க]]

கார் டிரைவர் சூப்பரான செலக்சன் பாட்டு வச்சிருக்கார் பிரயாணத்தில் அந்த பாட்டுக்கள் "மனோ"ரஞ்சிதா ஸாரி ரஞ்சிதமாக இருந்தது ரசித்து கேட்டோம்...!!!

[[பக்தியுடன் சுவாமிகளை வணங்கும் அருவானந்தா ச்சே ச்சீ சண்முகபாண்டி]]

வரும் வழியில் தூரத்தில் இருந்தே ஆபிசரின் வீட்டை பார்த்தோம் அம்பாசமுத்திரத்தில், பண்ணை வீடு போன்று வெள்ளை கலரில் பளபளத்தது வீடு, அடுத்தமுறை போனால் வீட்டை போயி பார்க்க வேண்டும்.

[[அடடா பாக்கியராஜ் அண்ணன் இங்கே எப்பிடி வந்தாரு இளமையாக...?!!!]]

போகும் வழியில் மெட்ராஸ் பவனின் போன் ஆபீசருக்கு வர போனை எனக்கு கொடுத்தார், ஆமாம் சென்னைக்கு எப்போ வாறீங்க [[அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்]] அது வந்து எனக்கு ராஜஸ்தான் போகணும் ட்ரீட் மென்ட் எடுக்கணும் எனவே வரமுடியாது இருந்தாலும், ட்ரீட் மென்ட் முடிஞ்சதும் வாரேன் என்றேன்.

[[கேமரா எல்லாம் நல்லாத்தான் இருக்கு ஆனால் போட்டாதான் கொஞ்சமா எடுத்தார் ஆபீசர்]]

விடவில்லை கண்டிப்பா வரணும் இல்லைன்னா அருவாள் கன்பார்ம்'ன்னு சொல்லி அலறவைத்தார் [[ராஜஸ்தான் போகவேண்டாம்னு எங்க அண்ணன் சொல்லிட்டார் அவருக்கு சுகர் மறுபடியும் ஏறிவிட்டதாம் இன்னும் ஒன்றரை மாசம் கழித்துதான் ரிசல்ட் தெரியுமாம்]]

[[நாசமா போவாயாக நமக....என்று சொல்லி எல்லாருக்கும் லட்டு பிரசாதம் கொடுத்து ஆசி வழங்கும் ரவுடியானந்தா ச்சே ச்சீ திவானந்தா சுவாமிகள்]]

கார் விரைந்து சறுக்கியது இனிய பாடலுடன், கண்ணம்மா காதல் என்னும் கவிதை சொல்லடி உன் பிள்ளை தமிழில் கண்ணம்மா......இளையராஜா உருகிகொண்டிருந்தார்....

பயணம் தொடர்ந்து சறுக்கும்.....

போட்டோக்களுக்கு நன்றி கே ஆர் விஜயனுக்கு, இனி கண்ணை கவரும் இயற்கை காட்சிகள் நாளை.....



37 comments:

  1. தலைபிரட்டையை கல்தவளையாக மாறும் உண்மையை உலகத்துக்கு அறிவித்த விஞ்ஞானியே...வாழ்க

    ReplyDelete
  2. தலைபிரட்டையை மீன் என்று விளித்த மனோவே அதை நீங்கள் வறுத்து தின்றதாக வதந்தி உண்மையா?

    ReplyDelete
  3. பழைய பதிவில் போட்ட படத்தையே திரும்ப போடும் மனோ!ஒங்களுக்குள்ள முழிச்சிட்டு இருக்கிற மிருகம்தான் எங்களுக்குள்ள கோட்டரை போட்டுட்டு தூங்கிட்டு இருக்கு எழுப்பி விட்டா ரணகளம் ஆகிரும்.....

    ReplyDelete
  4. அறிவிப்பு

    ஒரு பிளாக்குக்கு சூனியம் வைக்க வேண்டும் சூனியகாரர்கள் அனுகவும்

    நாய்நக்ஸ்நக்கீரன்

    ReplyDelete
  5. நண்பர் சுரேஷ் அவர்களின் கவனத்திற்க்கு.
    சாதாரணமாக நாம் காணும் தலைப்பிரட்டை மிகவும் சிறியதாக இருக்கும்.அதை அடியில் பார்த்தால் சுருள் சுருளாக குடல் தெரியும். ஆனால் இந்த தலைப்பிரட்டை மிகவும் பெரியதாக இருந்தது. இந்த வகையை நான் பார்த்தது இதுவே முதல் தடவை.

    ReplyDelete
  6. வீடு K.S.சுரேஸ்குமார் said...
    தலைபிரட்டையை கல்தவளையாக மாறும் உண்மையை உலகத்துக்கு அறிவித்த விஞ்ஞானியே...வாழ்க//

    அடப்பாவி, இது வேற அது வேற....

    ReplyDelete
  7. வீடு K.S.சுரேஸ்குமார் said...
    தலைபிரட்டையை மீன் என்று விளித்த மனோவே அதை நீங்கள் வறுத்து தின்றதாக வதந்தி உண்மையா?//

    யோவ் நாய் கறி திங்குறவன் கூட [[வியட்னாம் டுபுக்கு]] எல்லாம் நான் நண்பனாக இருக்கிறேன் என்பதை மறக்கவேண்டாம் ஹி ஹி...

    ReplyDelete
  8. வீடு K.S.சுரேஸ்குமார் said...
    பழைய பதிவில் போட்ட படத்தையே திரும்ப போடும் மனோ!ஒங்களுக்குள்ள முழிச்சிட்டு இருக்கிற மிருகம்தான் எங்களுக்குள்ள கோட்டரை போட்டுட்டு தூங்கிட்டு இருக்கு எழுப்பி விட்டா ரணகளம் ஆகிரும்.....//

    ஐயோ அதில் சின்ன சின்ன மாற்றம் இருக்கும் உன்னிப்பா பாருங்க ஹே ஹே....

    ReplyDelete
  9. வீடு K.S.சுரேஸ்குமார் said...
    அறிவிப்பு

    ஒரு பிளாக்குக்கு சூனியம் வைக்க வேண்டும் சூனியகாரர்கள் அனுகவும்

    நாய்நக்ஸ்நக்கீரன்//

    என்னை வெட்டுங்கடா'ன்னு அவர்தான் சொன்னார் வெட்டியாச்சு போதுமா...?

    ReplyDelete
  10. கே. ஆர்.விஜயன் said...
    நண்பர் சுரேஷ் அவர்களின் கவனத்திற்க்கு.
    சாதாரணமாக நாம் காணும் தலைப்பிரட்டை மிகவும் சிறியதாக இருக்கும்.அதை அடியில் பார்த்தால் சுருள் சுருளாக குடல் தெரியும். ஆனால் இந்த தலைப்பிரட்டை மிகவும் பெரியதாக இருந்தது. இந்த வகையை நான் பார்த்தது இதுவே முதல் தடவை.//

    அதானே, சுரேஷ் காவிரி ஆத்துல பார்த்ததை சொல்லிட்டாரு போல....

    ReplyDelete
  11. கலக்குங்க அண்ணே

    ReplyDelete
  12. எலேய் டவுசரு பாண்டி.....
    நாகர் கோயிலு வாலே!

    ReplyDelete
  13. லொக்கேஷன் எல்லாம் செமையா இருக்கு.. வாழுறீங்கய்யா...


    நட்புடன்
    கவிதை காதலன்

    ReplyDelete
  14. மனோ அண்ணன் மிகவும் இளமையாக காட்சி அளிக்கிறார்
    அண்ணே பத்து வயசு குறைந்தது போல இருக்கு ungalukku.

    ReplyDelete
  15. ஆபிசர் மிக அமைதியாக தோற்றம் அளிக்கிறார்

    ReplyDelete
  16. //கார்பக்கம் வந்த விஜயன் அய்யய்யோ என் செருப்பை அருவிக்கரையில் மறந்து விட்டுட்டு வந்துட்டேனே என்று அலறி ஓடினார்.//
    செருப்பு மட்டுமா, மனசையும்தானே!

    ReplyDelete
  17. சுவாமி வம்பானந்தா பயம் காட்டுகிறார்
    அன்பாக லட்டு கொடுத்து

    ReplyDelete
  18. // siva sankar said...
    ஆபிசர் மிக அமைதியாக தோற்றம் அளிக்கிறார்//
    ஆஹா, இது நிஜமா? கிண்டலா?

    ReplyDelete
  19. //மனோ அண்ணன் வேற குளிச்சிட்டாரூ அங்கே குளிக்கிற எவனுக்கேல்லாம் வியாதி வந்து சாகப்போறானோ தெரியலையே என்று திருவாய் மலர்ந்தார்,//
    மறுநாள் பேப்பர்ல ரிசல்ட் வந்தது. :))

    ReplyDelete
  20. அட ஆபிசர் அந்த நாள் நியாபகம் வந்ததே
    அந்த நாள் நியாபகம் வந்ததே ஆபிசர்.ஆபிசர்

    ReplyDelete
  21. ஆபிசர் ஐயா நலம் தானே
    மிக நீண்ட நாட்கள் ஆகிட்டு தங்களை சந்தித்து

    ReplyDelete
  22. //siva sankar said...
    சுவாமி வம்பானந்தா பயம் காட்டுகிறார்
    அன்பாக லட்டு கொடுத்து//
    பவ்யமும் காட்டுவார்.

    ReplyDelete
  23. அம்பாசமுத்திரத்தில், பண்ணை வீடு போன்று வெள்ளை கலரில் பளபளத்தது வீடு, அடுத்தமுறை போனால் வீட்டை போயி பார்க்க வேண்டும்.//

    நிச்சயம் நானும் வருவேன்...
    பண்ணை வீடு போன்று // no பண்ணையார் வீடுதான்.

    ReplyDelete
  24. // siva sankar said...
    அட ஆபிசர் அந்த நாள் நியாபகம் வந்ததே
    அந்த நாள் நியாபகம் வந்ததே ஆபிசர்.ஆபிசர்//
    அவ்வளவு வயசானவரா என்னை ஆக்கிட்டீங்களே! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  25. //siva sankar said...
    ஆபிசர் ஐயா நலம் தானே
    மிக நீண்ட நாட்கள் ஆகிட்டு தங்களை சந்தித்து//
    பார்த்து,மனோ வந்து, என் ப்ளாக்ல கும்மியடிச்சிட்டீங்களேன்னு குமுறப்போறாரு!

    ReplyDelete
  26. கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்.--SO NO PBM..HAHAHA.

    ReplyDelete
  27. // siva sankar said...
    அம்பாசமுத்திரத்தில், பண்ணை வீடு போன்று வெள்ளை கலரில் பளபளத்தது வீடு, அடுத்தமுறை போனால் வீட்டை போயி பார்க்க வேண்டும்.//

    நிச்சயம் நானும் வருவேன்...
    பண்ணை வீடு போன்று // no பண்ணையார் வீடுதான்.//
    ஆஹா, மனோ வசமாத்தான் பொருத்திப்போட்டிருக்காரு!

    ReplyDelete
  28. அதோ அன்று ஒரு நாள் அண்ணன் சிபி அவர்கள் ப்ளோகில் சந்தித்து கொண்டோமே...
    அவர்கள் நம்மை விரட்டிகூட விட்டாரே (எப்படி கும்மி அடிப்பதை பார்த்து)

    ReplyDelete
  29. எங்க ஆபீசர் வந்து விடுவார்
    நன்றி ஆபிசெர் பிறகு சந்திக்கிறேன்

    ReplyDelete
  30. Oho..ennidam ...
    Kenjiyathai....
    Sollalai......

    Unnudaiya...
    Antha ...photo...
    Poda....poren......!!!!!!!!

    ReplyDelete
  31. சுவைமிக்கப் பயணம்!
    இயற்கைக் காட்சிகள் அருமை!

    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  32. நீங்கள் தொடர்ந்து சறுக்குங்க நான் பின்னால் வந்து கொண்டே இருக்கின்றேன் 
    மணிமண்டபவம்  புதிய தகவல் மக்கா!

    ReplyDelete
  33. //இந்த முறை என்னாச்சுன்னே தெரியலை ஆபீசர் கொஞ்சமாதான் போட்டோக்கள் எடுத்தார்,//

    கொஞ்சம் எடுத்ததே பத்தாயிரத்த தாண்டி போகும் போல இருக்கு....தினத்தந்தி கன்னித்தீவு கதை கூட முடிஞ்சிரும்..இது ஆவுறதில்ல..

    ReplyDelete
  34. //ராத்திரி போனபடியால் ஒன்னுமே தெரியவில்லை, பகல்லதான் எல்லாமே ரசித்து பார்க்க முடிந்தது...!//

    இந்த தத்துவத்த யாருமே சொன்னதில்ல...

    ReplyDelete
  35. //போன பதிவில் அந்த மீனின் படம் போட்டு இருக்கேன் பார்த்துக்கோங்க//

    மீன் கெடக்குது கழுதை. எங்களுக்கு உங்ககிட்ட இருந்து ஜாமீன் எப்ப??

    ReplyDelete
  36. friday im in love அப்ப மத்த நாட்கள்ல.,?

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!