Friday, December 2, 2011

மரண தண்டனையின் வரலாறு 0+0=0 தான்.ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. மரணதண்டயை விதிக்கப்பட்ட 26 பேரில் 19 பேர் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். மீதியுள்ள 7 பேரில்  பேரறிவாளன், முருகன், சாந்தன் தவிர நளினி உட்பட 4 பேருக்கு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. மற்ற மூவரும் 20 ஆண்டுகளாக தூக்கு கயிற்றை எண்ணி எண்ணி சோர்ந்து விட்டனர். இப்படி மன உளைச்சலைகொடுத்ததே பெரிய தண்டனை தான்.


• ராஜிவ் காந்தி கொல்லப்பட்டதற்கு ஈழத்தில் இந்திய அமைதிப்படையின் ஆக்கிமிப்புக்கு அவர் உத்தரவிட்டது தான் காரணம் என்று ஜெயின் கமிஷன் சொன்னது.

• நேரடி குற்றவாளிகள் தற்கொலை செய்து கொண்டது

• மரண தண்டனை பெற்று தவித்து கொண்டிருக்கும் மூவரும் ஆதரவு அளித்தார்கள் என்ற
அடிப்படையில் மட்டுமே தண்டணையளிக்கப்பட்டது.

இருபது ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து இருப்பதே போதுமானது. விடுதலை செய்யலாம் என்பது 
அனைத்து மனிதாபிமானிகளின் கருத்தாக உள்ளது. இந்த நியாயங்கள் ஏதுமில்லாத அஜ்மல் கஸாப் போன்ற நூற்று கணக்கானோரை கொன்றபயங்கரவாதிகளுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கலாமா? ஏன்று கேட்டால் நாம் மனம் கொதித்து சொல்வோம் ஆம்..! விதிக்க வேண்டும் என்று.அதனால் என்ன பலன் காண முடியும் என்று கேட்டால் நாம் அவனுக்கு அப்போது தான் வலிக்கும் அவன் அந்த வலியை உணர்வான் என்போம். சரி வலி உணர்ந்தவன் எங்கே இருப்பான் அவன் அழிந்திருப்பான். அப்புறம் எப்படி அந்த வலியை அவன் உணர முடியும்.. அப்புறம் ஏன் அவன் வலியை உணர வேண்டும்?

ஒருவன் ஒரு குடும்பத்தை வாகனம் ஏற்றி கொன்று விட்டான். அவனுக்கு எப்படி வலியை உணர வைப்பது.. அல்லது பாடம் புகட்டுவது.. அவன் குடும்பத்தையே வாகனம் ஏற்றி கொன்றுவிடலாமா..? அதன் பலன் என்னவாக இருக்கும்..

நாம் அரேபிய தண்டனை காட்டுமிராண்டிதனம் என்கிறோம். களவாடினால் கையை வெட்டு, கள்ள 
தொடர்புக்கு ‘அதை’ வெட்டி கொல்லும் தண்டனை என்கிறார்கள். நாம் அந்த குற்றத்திற்கெல்லாம் சிறைத் தண்டனை கொடுத்துவிட்டு கொலைக்கு மட்டும் கொலை என்கிறோம் இது காட்டுமிராண்டி தனம் இல்லையா?

தனியொரு மனிதன் ஒரு கொலை செய்தால் அவன் குணத்தை குறை சொல்கிறோம். ஆனால் 100 கோடி 
மக்கள் சாட்சியாக அரசு ஒரு கொலை செய்தால் அதை தண்டனை என்கிறோம்.. இது என்ன நியாயம்.
இந்த கேள்வியை முன்வைத்தால் பாதிக்கப்பட்டவிரின் மனநிலையில் இருந்து பார்க்க வேண்டும் என்கிறார்கள். பாதிக்கப்பட்டவர் மனநிலையிலிருந்து தான் தண்டனை கொடுக்க வேண்டும் என்றால் வெட்டுக்கு வெட்டு, கொலைக்கு கொலை என்று தான் தீர்ப்பளிக்க வேண்டும். இதை தான் மக்கள் விரும்புவார்கள். ஏனெனில் கிரிமினல் குற்றங்களுக்கு சிறை தண்டனை கொடுப்பதையே தண்டனையாக கருதவில்லை.


ஆகவே தண்டனை என்பதை அரசு தான் முடிவு செய்ய வேண்டும். அந்த தண்டனைகளும் அறம், உலக 
அளவில் சோதிக்கப்பட்ட அறிவியல் , பகுத்தறிவு அடிப்படையில் தண்டனை முறைகளை வகுக்க வேண்டும்.


மரணதண்டனைக்கு குற்றங்களை தடுக்கும் ஆற்றல் உண்டா? குற்றங்கள் பொதுவாக..ஆதாய குற்றங்கள்..உணர்ச்சிவயக் குற்றங்கள்..மனவிகாரக் குற்றங்கள்..லட்சியக் குற்றங்கள்.


இதில் ஆதாய குற்றம் செய்பவர்கள் சட்டங்களை ஏமாற்றிவிட முடியும் என்று துல்லியமாக திட்டமிட்டு செயல்படுவார்கள். இவர்களுக்கு மரணதண்டனையும் தப்பிக்க கூடியதே..

 உணர்ச்சிவய குற்றமிழைப்போர் உணர்ச்சிவயத்தால் தான் என்ன செய்தோம் என்று என்பதையே 
உணரமாட்டார்கள். இவர்கள் தனக்கு என்ன தண்டனையை பற்றியும் சிந்திக்கப் போவதில்லை.

 இலட்சிய குற்றம் செய்வோர் தாம் கொண்ட லட்சியத்திற்க்காக உயிரையும் கொடுக்க துணிந்து 
குற்றங்களில் ஈடுபடுவர். இவர்களுக்கு மரண தண்டனை ஒரு பொருட்டே கிடையாது.. ஆக மரண தண்டனைக்கு எந்த குற்றத்தையும் தடுக்கும் ஆற்றல் இல்லை. மரணத்தில் ஆக்கப்பூர்வமாக ஒன்றுமில்லை. அது அழிவில் தொடங்கி அழிவில் முடியும் அழிவு சுழற்சி தான்.

 உலகில் மரண தண்டனை அளிக்கும் நாடுகளின் அனுபவம் என்ன? சீனா உலகின் முதன்மை மரண தண்டனைக்கார நாடு. ஓவ்வொரு ஆண்டும் 2000 பேருக்கும் 
மேல் மரண தண்டனை கொடுக்கப்படுகிறது. ஆனால் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஆண்டுக்கு ஆண்டு மரண தண்டனைக்கான ஆட்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே தான் போகிறது.

 இரண்டாமிடத்தில் திருவாளர் அமெரிக்கா.. அங்கும் இதே தொடர்கதை தான் நடக்கிறது. மரண 
தண்டனை விதிக்கப்பட்டு கொண்டே இருந்தாலும் குற்றங்கள் குறையாமல் நடக்கிறது.

 உலகில் குற்றம் குறைவாக நடக்கும் நாடு எது.. சுவிட்சர்லாந்து. அங்கு மரண தண்டனை
ஒழிக்கப்பட்டு 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. அங்கு நல்லாட்சி நடக்கிறது. அதனால் குற்றங்கள்
குறைகிறது. 

இந்தியா தன்னை பெரிய ஜனநாயக நாடு என்று மார்தட்டி கொள்கிறது. ஆனால் இரு குட்டிநாடுகள் தன் முன்மாதிரி நடவடிக்கைகளால் இந்தியாவின் தலையில் குட்டி கொண்டிருக்கிறது. ஆம்.. நேபாளம் 1990 லும், பூடான் 2006 ம் ஆண்டும் மரண தண்டனையை ஒழித்தது. இரண்டு நாடுகளும் மரண தண்டனையை ஒழிக்கும் போது அந்த நாடுகளை மன்னர்கள் தான் ஆண்டுகொண்டிருந்தார்கள்.

 ஒரு நாட்டின் சட்டத்திற்கும், அறத்திற்கும் இடைவெளி இல்லாமல் இருக்கும் போது தான் சட்டம் உயிர் பெரும். நம் 
நாட்டை அறம் ஆள்கிறதா..? அறம் ஆளாத நாட்டில் சட்டத்தின் வேலை பிணம் திண்ணுவது தான். அரசியலில் பழிவாங்கப்பட்டார்.. தவறாக தண்டிக்கப்பட்டார் என்று பின்னாலில் வரலாறு சொல்லும்.

 மரண தண்டனை எந்த வரலாற்றையும் விடுதலை செய்வதில்லை.......................
 மரண தண்டனையின் வரலாறு 0+0=0 தான்.நன்றி : நக்கீரன்.

19 comments:

 1. ஒ. நான்தான் முதலா? இருங்க படிச்சுட்டு வறேன்..

  ReplyDelete
 2. குற்றங்கள் பொதுவாக..ஆதாய குற்றங்கள்..உணர்ச்சிவயக் குற்றங்கள்..மனவிகாரக் குற்றங்கள்..லட்சியக் குற்றங்கள்..// குற்றங்கள் இவ்வளவு வகைப் படுமா?

  ReplyDelete
 3. இரு குட்டிநாடுகள் தன் முன்மாதிரி நடவடிக்கைகளால் இந்தியாவின் தலையில் குட்டி கொண்டிருக்கிறது. ஆம்.. நேபாளம் 1990 லும், பூடான் 2006 ம் ஆண்டும் மரண தண்டனையை ஒழித்தது. .. ஒ அப்படியா மக்கா. தகவலுக்கு நன்றி.

  ReplyDelete
 4. ஒரு நாட்டின் சட்டத்திற்கும், அறத்திற்கும் இடைவெளி இல்லாமல் இருக்கும் போது தான் சட்டம் உயிர் பெரும். நம் நாட்டை அறம் ஆள்கிறதா..? அறம் ஆளாத நாட்டில் சட்டத்தின் வேலை பிணம் திண்ணுவது தான். அரசியலில் பழிவாங்கப்பட்டார்.. தவறாக தண்டிக்கப்பட்டார் என்று பின்னாலில் வரலாறு சொல்லும்.// இதுதான் உண்மை..

  ReplyDelete
 5. சோனியா பூந்தி போட்டோ சூப்பர்

  ReplyDelete
 6. நன்றி நக்கீரன்...மற்றும் இந்த விஷயத்தை அலேக்கா தூக்கி போட்ட திரு மனோ அண்ணனுக்கும்!

  ReplyDelete
 7. ஈழப்போருக்குள் அகப்பட்டு ஊசலாடும் இந்த மூவருக்கும் நல்லதே நடகவேணும்.ஆனால் அவர்களது வாழ்வின் காலத்தை விழுங்கிகொண்டார்கள் !

  ReplyDelete
 8. //ஆதாய குற்றங்கள்..உணர்ச்சிவயக் குற்றங்கள்..மனவிகாரக் குற்றங்கள்..லட்சியக் குற்றங்கள்//

  அரசியல் குற்றத்தை பத்தி ஒண்ணுமே சொல்லலே

  ஒ அதுக்குதான் போட்டோ போட்டு இருக்கார்ல மக்கா

  ReplyDelete
 9. விரைவில் இந்த மூன்றுபேருக்கும் ஒரு நல்ல தீர்ப்பு கிட்ட வேண்டும் .உண்மையில் சோனியா "பூந்தி "
  படம் அருமை சகோ .மிக்க நன்றி பகிர்வுக்கு .இன்று அவசியம் என் பதிவைப் படித்து கருத்து சொல்லுங்கள் .
  நன்றி சகோ .

  ReplyDelete
 10. 'அட' இரக இடுகை..இரண்டு முறை வாசித்தேன்..பகிர்விற்கு நன்றி...
  ஆனாலும் உங்கள இராஜா சார் இன்னைக்கு இப்புடி கலைசிருக்கக் கூடாது...:)
  இன்று என் வலைப்பூவில்... மனவாசம்

  ReplyDelete
 11. தங்கள் தேடலில் நல்ல பகிர்வு.....

  ReplyDelete
 12. நல்ல பகிர்வுக்கு நன்றி.

  ReplyDelete
 13. நல்ல பகிர்வு!! (தல எப்படி இருக்கீங்க!!)

  ReplyDelete
 14. அருமையான கட்டுரை பகிர்வுக்கு நன்றி.....

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!