Monday, December 5, 2011

வெளிநாடானாலும் ரௌத்திரம் பழகு....!!!

நேற்று....

முட்டையையும் சிக்கனையும் வயிற்றில் அடக்கம் பண்ணுவதால் [[கொஞ்சமாதான்]] சூடு ஏறி முகத்தில் ஒரு பரு வந்து விட்டதால் செல்ஃப் ஷேவ் செய்யமுடியாமல் போய்விட்டது, நான் தங்கியிருக்கும் இடத்தில் சலூன்கள் இருந்தாலும் அங்கே வேலை பார்ப்பவர்கள் பிலிப்பைனி, பாக்கிஸ்தானை சேர்ந்தவர்களாக இருந்ததால் அங்கே போவது கிடையாது.


எப்போதும் போகவர அஞ்சி தினார் கொடுத்து டாக்சியில் போயிதான் முடி வெட்ட போயி வருவது வழக்கம், ஷேவ் நானே செய்து கொள்வேன், முகத்தில் பரு வந்து விட்டதால் செல்ஃப் ஷேவ் பண்ண முடியாமல் போய் விடவே, முதலாளி வந்தபோது [[ஹோட்டல் ஃபீல்ட்ல எப்பவும் ஃபிரஷ்சா இருக்கணும் என்பது ரூல்ஸ்]] விஷயத்தை சொன்னதும், இட்ஸ் ஓகே மனோஜ்'ன்னு போயிட்டான்.


பத்துநாள் ஆகியும் கொய்யால பரு அப்பிடியே இருக்கு மாறலை, எனக்கோ ஒரு மாதிரி இருக்கவே சரி இன்னைக்கு சலூன்ல போயி ஷேவ் பண்ணிருவோம்னு வேலை முடிஞ்சதும் டாக்ஸி பிடிச்சி கிளம்பிட்டேன்.


குதேபியாவில் எட்டு வருஷமாக நான் போகும் தமிழ்காரர் சலூன், அதன் முதலாளியை எப்போதுமே நண்பர்கள் மாமா என்றுதான் அழைப்போம் அவ்வளவு அன்பாக இருப்பார் எங்களிடம், அங்கே போயி ஷேவ் பண்ணிவிட்டு திரும்பவும் டாக்ஸி பிடிக்க நின்றால், ஒரு டாக்ஸியையும் காணோம்.


என்னடான்னு விசாரித்தால், முகரம் பண்டிகை என்பதால் [[கலவரம் நடக்கும் அபாயம் இருப்பதால்]] டாக்ஸி ஒன்னையும் காணோம், சரி பக்கத்தில் உள்ள கடைக்காரனிடம் கள்ள டாக்ஸி [[ கள்ளத்தனமாக டாக்ஸி ஓட்டுபவர்கள்]] கிடைக்குமா என கேட்கவும், அவன் ஒரு நம்பருக்கு போன் பண்ணினான்...


கொஞ்ச நேரத்தில் கார் [[கள்ள டாக்ஸி]] வந்துவிட காரில் ஏறினேன், டிரைவர் மலையாளி சேட்டன், இனி நாங்கள் பேசிக்கொண்டது.....

சேட்டன் : எங்கே போகணும்..? [[மலையாளத்தில்]]

நான் : ஜூஃபேர்.

சேட்டன் : நீ முந்தாநாள் ராமி இன்டர் நேஷனல் ஓட்டலில் என் வண்டியில் இருந்து இறங்கி காசு தராமல் ஓடினவனாச்சே...

நான் : ஹா ஹா ஹா ஹா நான் குதேபியா வந்தே ஒரு வாரத்திற்கு மேலாச்சு...

சேட்டன் : டேய்....... [[ஆஹா]] நான் இருவத்தி அஞ்சி வருஷமா டாக்ஸி ஓட்டுறேன், என் ரெண்டு கண்ணால பார்த்தேன் நீயேதான்...

நான் : சேட்டா நான் வேலை செய்வது அந்த ஹோட்டல் அல்ல, வா நான் காட்டுறேன் இப்போது...

சேட்டன் : இல்லைடா நீயேதான்...

நான் : என்னாது டா'வா....?

சேட்டன் : எனக்கு அம்பது வயசாச்சு என்னா..?

நான் : அப்போ சரி சேட்டா...

சேட்டன் : எடா நான் பார்க்காத நாடில்லை, போகாத இடமில்லை, நீ என் முன்னால் பொடிப்பையன் [[அவ்வ்வ்வ்]] தெரிஞ்சிக்கோ...

நான் : சேட்டன் கள்ளு [[சோமபானம்]] குடிச்சியிருக்கீங்களோ..?

சேட்டன் : நான் ஒரு முஸ்லீம், சாராயம் வாசனையை கூட மோந்து பார்த்தது கிடையாது...

நான் : நல்லது சேட்டா...

சேட்டன் : நான் ஒரிஜினல் மலையாளியோ இந்தியனோ கிடையாது, எங்கள் பூர்வீகம் ஈரான்.......!!!

நான் : அட அப்பிடியா [[கொஞ்சம் நக்கலுடன்]] சொல்லவே இல்ல...

சேட்டன் : பிழைப்பதற்காக எங்கள் மூதாதையர்கள் கேரளா வந்து இங்கேயே செட்டில் ஆகிவிட்டார்கள் [[ இது உண்மையா...??!!!]] டேய் உங்கள் இந்தியா'காரனுக ஜ்க்வ்நொகொர்க்ஜெஒஈப்வ்கொபிஒ [[சென்சார்]] 

நான் : ஹலோ மரியாதையா பேசுங்க இந்தியாவுல இருந்துட்டு இந்தியன் இல்லைன்னு சொல்றீங்களே வெக்கமாக இல்லையா...?

சேட்டன் : எடா நான் ஒரு முஸ்லீம் நீ....?  ஜோநோர்ப்கேர்ஜ்கேஜ்ஹோ[ரிம்ப்[ஓயோ[இர்க்ஜெஒ[ஈஜ்ஹெஇம்கெஒ[இம்ப்கோபெம் [[சென்சார்]]

நான் : வண்டியை நிறுத்து [[ஹைபிரஷர் ஏறிடுச்சு எனக்கு, இடம் ஜூஃபேர், பனோரமா ஹோட்டல் முன்பு உள்ள பெரிய சிக்னல்]] 

சிக்னலில் வண்டி நிற்கவும் வேகமாக இறங்கினேன்..

சேட்டன் : எடா ஹேய் காசு....?

நான் : போடா வெண்ணை...

சேட்டன் : போகேஜெப்க்ஜெப்ப்ஜ்ர்ப்ப்ர்பூப்க்ரோப்ஜ்ர்போஜ்ர்பூஜ்க்ர்ப்ப்ன்ர்ப்கோன்ஜ்ர்போப்ன்ஜ்ர்ப்கோப்ன்ற்போப்ர்போ [சென்சார்]]

நான் : வ்ஹெபிஒபொபொஇர்ஜொஇர்ஜ்பொஇஎர்ஜ்பொரிஜ்ரொஇப்ஜ்ரொஇஜ்ரொஇப்ஜ்ரொஈப்ஜ்ரொஇஜ்ஹ்ரொஜிஒ  [[சென்சார்]]

சேட்டன் : என்னையாடா திட்டினே நாயே......

என திட்டியவாறே, காரை சிக்னலில் நிறுத்தி விட்டு என்னை நோக்கி ஓடி வந்தான், நான் தாமதிக்கவே இல்லை, வயசை பார்க்கும் நிலையில் நானும் இல்லை, விட்டேன் பளார் பளார், டேய் நான் மலையாளி இல்லைடா நாயே, நான் தமிழன்டா பரதேசி'ன்னு  [[பிடிக்க கூட ஒருத்தனும் வரமுடியாது ஏன்னா அது சிக்னல் இருக்கும் இடம்]] விட்ட முதல் அடியிலேயே கதி கலங்கி போனான், ஏன்னா நான் அடிப்பேன்னு அவன் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை, ஏன்னா வண்டியில வரும்போது அவனின் அநாகரீக பேச்சுக்கு பாவம் போல உக்காந்து இருந்தேன் அல்லவா...!!!


அடிக்க அடிக்க "என்றே அம்மே என்ற அம்மே தல்லல்லே தல்லல்லே" என அலறினான், பின்னால் இருந்த வண்டிகள் ஒலி எழுப்பியதால், அவன் காரை நோக்கி ஓட, ஓட ஓட அடி கொடுக்கும்படி செய்துவிட்டான்.


ஆக இப்பிடிபட்டவனுகளுக்கு முதல்லயே அடிகுடுக்கணும் போல, அவன் பேசிய மதம் பற்றிய வெறி பேச்சு, என்னால் தாங்கமுடியாததாக இருந்தது, என் இடத்தில் முஸ்லீம் நண்பர்கள் இருந்தார்களானால் கூட கண்டிப்பாக காருக்குள்ளேயே அடி கொடுத்திருப்பார்கள் அப்படி அருவருப்பாக பேசினான்...!!

அவனை விடுவதாக இல்லை நான், இன்னைக்கு டியூட்டி முடிந்ததும் குதேபியா போவேன், என் முஸ்லீம் நண்பர்களுக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னேன், உடனே கிளம்பி வா மனோஜ் இப்பவே தூக்கிருவோம்'ன்னு சொன்னார்கள்...

ஒன்னும் செய்யவேண்டாம் ஜஸ்ட் வார்ன் பண்ணுவோம், இனி இதேபோல யாரிடமும் பேசக்கூடாது என்று சொல்லி இருக்கேன், பார்ப்போம் இன்று ராத்திரி என்ன நடக்குது என்று...!!!


டிஸ்கி : யப்பா மும்பை ஹிந்து முஸ்லீம் சண்டையில் நானும் என் நெருங்கிய முஸ்லீம், இந்து நண்பர்கள் உயிரை பறி கொடுத்துருக்கேன், இன்றும் மும்பையில் என் நெருங்கிய நண்பர்கள் குழு எல்லா மதத்தவர்களும்தான், மதம் பற்றி பேசும் போது மாறி மாறி கிண்டல் செய்து கொள்ளுவோமே அல்லாமல் மனதில் ஒன்றுமே இருப்பது இல்லை, இருக்கவும் செய்யாது, ஆனால் என் வாழ்க்கையில் முதல்முறை இந்த ஆள் பேசிய பேச்சு சத்தியமா கேட்கிற இந்தியா'காரனுக்கு கண்ணில் ரௌத்திரம் வரவைக்கும்...!!!

பஸ்கி : ஹா ஹா ஹா ஹா பதிவு கொஞ்சம் சூடா இருக்கோ, நீங்க கூலா இருங்கப்பா...!!

முஸ்கி : இன்டலி ஓட்டுல என் பெயர் [[ianaman]] அப்பிடின்னு இருக்கு, ஏன் சொல்றேன்னா நானும் இன்டலி ஓட்டு உங்களுக்கு போட்டுட்டு இருக்கேன்னு தெரியப்படுத்ததான் ஹி ஹி...

41 comments:

 1. அவன் பேசிய பேச்சிக்கு இன்னும் ரெண்டு அடி போட்டு இருக்கலாம்..எலேய் என்ன இருந்தாலும் அவன் உழச்ச காச கொடுக்காம வந்தது தப்புய்யா கொய்யால...

  ReplyDelete
 2. விக்கியுலகம் said...
  அவன் பேசிய பேச்சிக்கு இன்னும் ரெண்டு அடி போட்டு இருக்கலாம்..எலேய் என்ன இருந்தாலும் அவன் உழச்ச காச கொடுக்காம வந்தது தப்புய்யா கொய்யால..//

  அதான் இன்னைக்கு நைட்டு அங்கே போறேன்ல அப்போ குடுக்குறேன்...

  ReplyDelete
 3. சென்னை பித்தன் said...
  அருவா எங்க போச்சு?!//

  போங்க தல நானே டென்ஷன்ல இருக்கேன்...அவ்வவ்...

  ReplyDelete
 4. சிலர் அப்படித்தான் செய்கிறார்கள் மக்களே...
  ரௌத்திரம் பழகு ன்னு சொன்னது மிகச் சரி தான்...

  ReplyDelete
 5. Bulb-ye pongiduchee......
  Ini enna aaga povutho....

  ReplyDelete
 6. உடனே கிளம்பி வா மனோஜ் இப்பவே தூக்கிருவோம்'ன்னு சொன்னார்கள்...// மக்கா இம்புட்டு பவரா உங்களுக்கு அங்க? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

  ReplyDelete
 7. ஒரே ஒரு அடிதான் விழுந்ததா?

  ReplyDelete
 8. இன்டலி ஓட்டுல என் பெயர் [[ianaman]] அப்பிடின்னு இருக்கு, // ஓகே..ஓகே..

  ReplyDelete
 9. பாத்துச் சூதானமா நடந்துக்குங்க தல....இப்போ அங்க நிலைமை சரியில்லை!

  ReplyDelete
 10. தக்காளி, மலையாளி......

  ReplyDelete
 11. சூப்பர் பாஸ்! நீங்க வீரன் பாஸ்! முடிஞ்சா அவனை இன்னுமொருமுறை பின்னவும்! அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்!

  ReplyDelete
 12. இரவு போகும்பொழுது எச்சரிக்கையாக செல்லுங்கள் , என்ன நடந்தது என்று நாளை சொல்லுங்கள் .


  எமக்கு மனோ முக்கியம்

  நன்றி ,

  ReplyDelete
 13. அனைத்திலும் வாக்களித்தேன் நண்பரே

  ReplyDelete
 14. மனோ,

  ஒரு பாட்டு யாவகம் வருதய்யா.

  “கொடுத்தாலும் கொடுத்தாண்டா,
  நல்ல எடம் பாத்து கொடுத்தாண்டா”

  சூப்பர்.

  ReplyDelete
 15. நீங்க நல்லவரா ? கெட்டவரா ? டட்ட.. டேன் .. ட்டான்

  ReplyDelete
 16. கொய்யால...மனோ கையில அருவா இல்லை தப்பிச்சிட்டடி மாப்ளை...இல்லையினா ரனகளந்தா....
  ஹஹஹ

  ReplyDelete
 17. ராத்திரி மறுபடியும் போறிங்களா...? பாவம் விடுங்க வடிவேல் மாதிரி அழுதரப்போறான்...அவ்வ்வ்வ்வ்வ்வ்...

  ReplyDelete
 18. அண்னன் பெரிய கோபக்காரன் போல இருக்குதே

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. பாஸ் பத்தாது? அவன அப்புடியே விட கூடாது? ங்கொய்யா.... என்னா பேச்சு பேசுறான் ராஸ்கல்ஸ்!!!!

  அப்புறம் இன்ட்லில நம்ம பேரு realsanthanamfanz ன்னு இருக்கு...

  ReplyDelete
 21. உங்களுக்கு ரொம்ப தான் தைரியம் நடுரோட்டில் ஒருவரை அடிப்பதற்கு.இருந்தாலும் அவன் பேசிய பேச்சுக்கு நன்றாக வேண்டும் என்று தோன்றுகிறது.வெளிநாட்டில் ஜாக்கிரதையாக இருங்க.

  இன்றைக்கு என்ன ஆச்சுன்னு தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கு!

  ReplyDelete
 22. அவ்வ.... அண்ணனே புதுசு புதுசா திங் பண்ணி பதிவிட உங்களால் மட்டுமே முடியும்.... ஆனாலும் ரசிக்க முடியுது.... ஹீ ஹீ

  ReplyDelete
 23. கவனமாக இருங்க சகோ .இன்று இரவு செல்லும்போது நல்ல பாதுகாப்போடு
  செல்லவும் .ஒரு சகோதரியாக சொல்கிறேன் தயவுசெய்து நீங்கள் இருக்கும் இடத்தை கருத்திற்கொண்டு கவனமாக இருங்க .சென்று வந்தபின் நடந்தவற்றை எழுதவும் .

  ReplyDelete
 24. பார்த்து பத்திரமா இருங்க, மனோ.

  ReplyDelete
 25. சரத்பவார் வாங்கியதை விட பலமா கொடுத்திருப்பிங்க போல.

  நைட்டு வேற கச்சேரி இருக்கா?சரிதான்.

  ReplyDelete
 26. லேப்டாப்பு சூதானமா இருந்துக்க....

  ReplyDelete
 27. வணக்கம் மனோ அண்ணா,

  நல்லதோர் செயலினைச் செய்திருக்கிறீங்க.

  மதங்களின் பெயரால் மனிதர்களை மதிக்கத் தெரியாதோருக்கு நல்ல பாடம் கற்பித்திருக்கிறீங்க.

  நீங்க கொஞ்சம் அசந்திருந்தீங்க, முந்த நாள் நீ தான் டாக்சியில் ஏறி பணங் கொடுக்காம ஓடினாய் என்று உங்க பர்சையே காலி பண்ணியிருப்பான்..
  ஹே...

  ReplyDelete
 28. மனோ,நீங்களா,உங்களுக்குள் ஒருவனா??மனோவை சீரியசா நாங்க பார்த்தது இல்லையே??எப்பவும் சொல்லும் அருவாளைக் கொண்டு போகலையோ???ஒரு தரம் அடிச்சிட்டு ,விட்ற வேண்டிதானே,ஏன் மீண்டும் தொடர்கதை???பார்த்து இருங்க மனோ,அது நம் நாடு இல்லையே??

  ReplyDelete
 29. ரெளத்திரம் பழகுக.. எந்த சூழலிலும்!!
  நன்றி!

  ReplyDelete
 30. என்ன மனோசார் நீங்களும் காப்பிபதிவாளர் ஆகிட்டீங்களோ? பழக்க தோஷமா? நான் பதிவை காப்பி அடிப்பதை பற்றி பேசலை? சரத்பாவாரை அடித்த சர்தார்ஜி மாதிரி நீங்களும் அந்த சர்தார்ஜியை காப்பி அடித்து ப்ளார் ப்ளாட் என்று அடித்துவிட்டிர்க்ளே. அப்ப நீங்களும் காப்பி அடித்தவர்தானே??????

  ReplyDelete
 31. வணக்கம் மனோ அண்ணாச்சி!
  நலமா? 
  இப்படிச் சிலர் சேட்டன் என்று கொண்டும் வேற மொழியிலும் படம் காட்டும் டுபாக்கூர் பார்ட்டிகளுக்கு இப்படி செமயாக சாத்தினால் தான் திருந்து வார்கள்!

  ReplyDelete
 32. அட! இஸ்கி பயலே இம்புட்டு ஸ்கி இருக்கா?

  ReplyDelete
 33. அண்ணை பெரிய ரவுடி போல!

  ReplyDelete
 34. இப்படியான நாய்களுக்கு நாக்கை அரிந்தால் தான் மனிதர்கள் உருப்படுவார்கள் மனோ அண்ணே...

  ReplyDelete
 35. அண்ணே நானும் பழக்க தோசத்தில உங்களோட வம்பு பேசியே பழகீட்டுது... இனிமே ஒரடி எட்ட நிண்டு தான் வம்பு பேசணும்...

  ReplyDelete
 36. மக்கா, நீதானா அண்ணிக்கு சிக்னல்ல தகறாறு பண்ணுனது, தெரிந்திருந்தா, நான்ம் வந்து ரெண்டு சாத்தியிருப்பேனே?

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!