Friday, December 30, 2011

நாட்டு நடப்புகள்...!!!

ஐதராபாத்: பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதற்கு பெண்களின் ஆடைகள், ஆண்களை கவர்ச்சியூட்டி கவர்ந்திழுப்பதே காரணம். இன்றைய கிராமத்து பெண்கள் நாகரீக ஆடைகளை அணிகின்றனர் என ஆந்திரமாநில டி.ஜி.பி., தினேஷ் ரெட்டி கூறியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்த வண்ணம் உள்ளன. ஆந்திர மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்....!!![[ அப்போ நடிகைகள் போடுற டூ பீஸ் ஓகேவா கொய்யால...]]

சென்னை: ஒரு நாள் சில மணி நேரம் அடித்த தானே புயல் தாக்கத்தில் கடலூர் மாவட்டம், புது்‌ச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ‌கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே சேதங்கள் காரணமாக பலரும் பாதிப்பில் இருந்தும் அதிர்ச்சியில் இருந்தும் இன்னும் மீள மு‌டியாமல் தவித்து வருகின்றனர். கடலூரில் 21 பேர் உயிர் இழந்திருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் ‌தெரிவிக்கின்றன. இங்கு ‌மினசாரம் , தொலை தொடர்பு துணடிக்கப்பட்டிருப்பதால் மாவட்டம் முழுவதும் ஏற்பட்ட சேதங்கள் குறி்த்து இன்னும் முழு தகவல்கள் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் 8 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில்2 பேரும், சென்னையில் 3 பேரும் ஆக மொத்தம் 36 பேர் பலியாகியிருக்கின்றனர். இன்னும் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.


[[ஒன்னு மழையே பெய்யாமல் மக்களை கொல்லவேண்டியது, இல்லை மழை பேஞ்சே மக்களை கொல்லவேண்டியது, இயற்கையே பொறுமையாக இரு]]

சென்னை: தானே புயல் காரணமாக நேற்று கனமழை பெய்ததை தொடர்ந்து மணி முத்தா, கோமுகி, விடூர் அணைகள் நிரம்பியுள்ளன. இதனையடுத்து அணைக்கு வரும் உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. சென்னை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 3990 குளங்கள் நிரம்பி வழிகின்றன. இதனிடையே சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், புழல், பூண்டி, சோழாவரம் ஏரிகள் மூடப்பட்டுள்ளன நேற்று தானே புயல் காரணமாக புழல் ஏரி திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. செம்பரம்பாக்கம், பூண்டி, ஏரிக்கு விநாடிக்கு 1200 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது, புழல் ஏரிக்கு விநாடிக்கு 650 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. தண்ணீரை தேக்கிவைக்கும் பொருட்டு ஏரிகள் மூடப்பட்டுள்ளதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 


[[நல்லதே நடக்கட்டும்]]

திருநெல்வேலி, மற்றும் கன்னியாகுமரியில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.தானே புயல் கரைகடந்து வழுவிழந்தாலும் தமிழகத்தில் ஆங்காங்கே மிதமான மழை பெய்து வருகிறது. செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் மழை பெய்து வருகிறது. மற்ற கடலோர மாவட்டங்களான கடலூர், திருவாருர், நாகை பகுதியில் மழை படிப்படியே குறைந்து வருகிறது.


[[ஹலோ ஆபீசர், குளிக்காமல் சுத்திட்டு திரியும் இம்சை அரசனையும், திவானந்தாவையும், சண்முகபாண்டியனையும், கே ஆர் விஜயனையும் பெல்டால் விளாசி குளிக்க சொல்லுங்க]][[எவ்வளவோ பார்த்துட்டோம், இதை பார்க்க மாட்டோமா மேடம், கஞ்சா கேஸ் உண்டா...!!!]]

முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள முதல்வர் உம்மன்சாண்டியை மாற்ற வேண்டும் என்ற இளங்கோவன் நிலைபாட்டுக்கு, மாநில பா.ஜ., தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் ஆதரவு தெரிவித்துள்ளார். 


[[ விடுங்கய்யா விடுங்கய்யா அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!!!]]

இந்தியாவுடன் மோதுவது நெருப்புடன் மோதுவதற்கு சமம். நாங்கள் நெருப்புடன் விளையாட முட்டாள் அல்ல,'' என இந்தியாவுக்கான சீனா துணை தூதர் நியோ கியூங்பயோ பேசினார்.


[[பின்னே ஒரு கேப்டனை பார்த்தே பாகிஸ்தான் வாலை சுருட்டிட்டு இருக்கு, அப்புறம் சைனாவுக்கு நம்ம பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அண்ணனின் ஒரு படமே போதுமானதுன்னு சைனாவுக்கு தெரியாதா என்ன...?]]

மயில்,தேசிய பறவையாக அறிவிக்கப்பட்டுள்ளது போல், லாலு பிரசாத் யாதவை, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நபராக அறிவிக்க வேண்டும்' என, பா.ஜ., எம்.பி., சத்ருகன் சின்கா, நகைச்சுவையாக பேசினார்.


[[அவ்வ்வ்வ்வ்வ் அண்ணே இதென்ன சினிமாவா...?]]

இல்லானை இல்லானும் மதிக்காதது மாறி

உள்ளானை உள்ளான் மதிப்பது மாறி 

இல்லானை உள்ளானும் 

உள்ளானை இல்லானும் 

மதிக்க கற்றுக்கொள்வோம்...!!!

இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தெரிவித்து கொள்கிறேன்...!

கடலூரில் புயல் மழையாக இருப்பதால், கரண்ட் கட் பத்துநாளைக்கு இருப்பதால் பதிவுலகம் வரமுடியாது என்பதை "நாய் நக்ஸ்"நக்கீரன் அண்ணன் பதிவுலக நண்பர்களுக்கு தெரியப்படுத்த சொன்னார்.......!!!

38 comments:

 1. Here also power Cut for last two days

  ReplyDelete
 2. என்ன தம்பி திடீர்னு திருந்திட்டான்? அவ்வ்

  ReplyDelete
 3. [[பின்னே ஒரு கேப்டனை பார்த்தே பாகிஸ்தான் வாலை சுருட்டிட்டு இருக்கு, அப்புறம் சைனாவுக்கு நம்ம பவர்ஸ்டார் டாக்டர் சீனிவாசன் அண்ணனின் ஒரு படமே போதுமானதுன்னு சைனாவுக்கு தெரியாதா என்ன...?]]

  >>>>
  அட,சைனாவை வழிக்கு கொண்டுவர இப்படி கூட வழி இருக்கா?

  ReplyDelete
 4. NANRI...MANO...
  NANRI....

  NANBARGALE...MEENDUM PIRAGU VARUKIREN.....

  ATHU VARAI...MOBILE THAN.....
  ENNA ULAGA MAGA COMMENT PODA MUDIYATHU.....

  ReplyDelete
 5. ஆணை நிரம்பியதோ இல்லையோ...
  புள்ளி விவரங்கள் கேப்டன் பாணியில் அள்ளி வீசிட்டீங்க...

  ReplyDelete
 6. மக்களே..
  வணக்கம் யா..
  இன்னைக்கு சுடச்சுட நடக்கும் சம்பவங்களை
  உங்கள் பாணியில் சும்மா அசத்தலா சொல்லிட்டீங்க. ...

  "தானே" வந்து எல்லாத்தையும் ஒரு வழி பண்ணிடுசுய்யா..
  கடலூர் ல இருக்கும் என் நண்பனை தொடர்பு கொள்ள முயற்சி செய்றேன்.. இன்னும் முடியல..
  மனசுக்கு சங்கடமாத்தான் இருக்கு.
  என்ன செய்ய வருசா வருஷம் இதே பொழப்பா போச்சு.

  மணிமுத்தாறு நிறையட்டும் யா அப்போதான் தென்மாநிலங்கள்
  விவசாயத்தில் முன்னேற்றம் அடையும்.

  அத்தனை செய்திகளுக்கு நன்றிகள் பல மக்களே.

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு
  நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 7. இனிமே உங்களை பதிவுலக கேப்டன் என்று அன்போடு அழைப்போமாக...:)))))

  ReplyDelete
 8. மயிலன் said..
  இனிமே உங்களை பதிவுலக கேப்டன் என்று அன்போடு அழைப்போமாக...:)))))
  பதிவுலக கேப்டன் வாழ்க வாழ்க

  ReplyDelete
 9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  ReplyDelete
 10. நடப்பு செய்திகளை பட்டியலிட்டு காட்டிவிட்டீர்கள்..

  இல்லான்-உள்ளான் நல்ல செய்தி..

  வாழ்த்துகள்..

  ReplyDelete
 11. மனோ அண்ணே உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 12. பவர் ஸ்டார் படங்கள்லாம் பாப்பீஙகளா... நெறைய மனோதைரியம் உங்களுக்கு... சீனாவுக்கு அவர் ஒருத்தரே போதும்கற கமெண்ட் சூப்பர். (எனக்குத்தான் இப்டில்லாம் எழுதவர மாட்டேங்குது...) மீண்டும் உங்களுக்கு என் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் நண்பா!

  ReplyDelete
 13. அருமையான நாட்டு நடப்புகள்! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

  ReplyDelete
 14. வழமையான பணியில் நக்கலும் நையாண்டியும் கொண்ட உங்களின் இடுகை மிகவும் சிறப்பு எப்படி சிந்திர்கிரீர்கள் என்பதே புரியவில்லி பாராட்டுகள் ...

  ReplyDelete
 15. அண்ணே அடிச்சி துவச்சிட்டீங்க போல...ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 16. மக்கா உன் காட்டிலும் மழையோ மழை...கொளுத்து..வெளுத்து கட்டு மக்கா வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. // கரண்ட் கட் பத்துநாளைக்கு இருப்பதால் பதிவுலகம் வரமுடியாது என்பதை "நாய் நக்ஸ்"நக்கீரன் அண்ணன் பதிவுலக நண்பர்களுக்கு தெரியப்படுத்த சொன்னார்.......!!!//

  அப்பாட. தப்பிச்சது பதிவுலகம். கோடி கும்புடு.

  ReplyDelete
 18. அறிந்துகொண்டேன்.
  தகவலுக்கு நன்றி.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 19. மனோ...பிறக்கிற 2012ல் இன்னும் கலகலன்னு இருக்க அன்பு வாழ்த்துகள் !

  ReplyDelete
 20. படிச்சு பின் கருத்திடுவேன்பா...

  மனம் நிறைந்த அன்பு புத்தாண்டு நல்வாழ்த்துகள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்....

  ReplyDelete
 21. நாட்டு நடப்பை ஒரே பதிவில் கொண்டு வந்துட்டீங்களா....... :)

  நல்ல முயற்சி பாஸ்.

  அப்புறம் முதல் போட்டோவ பார்த்து நான் அவங்க "அவங்களோ" என்று நினைச்சுட்டேன்.... அவ்வ்வவ்வ்

  உங்களுக்கும் உங்க இனிய மகளுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 22. மனோ இந்தமாதிரி நாட்டு நடப்பு, சில விசயங்களை தொகுப்பா..தரும்போது ஒரு பெயரை வைக்கலாமே கிச்சிளிக்கான்ஸ்,கொத்து புரோட்டா,இது மாதிரி.....வாரம் ஒரு முறை போடுங்க நல்லாயிருக்கு....

  பிறகு சிவக்குமார் கூறியதை வழிமொழிகிறேன்......ஹஹ

  ReplyDelete
 23. தொகுப்புக்கு நன்றி...
  கடலூர் பாண்டியில் இருந்து என்னடா ஒரு செய்தியும் காணோம் என்று உங்களால் தெரிந்து கொண்டேன்...
  கோகுல் சார் எப்படி இருக்கிறாரோ தெரியவில்லையே...
  ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்

  ReplyDelete
 24. உனக்கும் நம்ம பன்னிக்கும் இன்னா சீக்ரெட்டு அக்ரீமேண்டா நைனா? ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அந்த ஆளு படத்த போட்டு ஏன் மென் மெர்ச்சல் பண்ணிகினுகீறீங்க? அடிக்கிற வெயில்ல நம்ம ஊர்ல எவனையா இம்மா நீட்டம் கோட்டு போட்டுகினுகீரான் ? அத்த பாத்தாலே பத்திகினு எரியுது மேன் இனிமே அந்த ஆளு படம் போட்டு பதிவு வுட்டுகினா உன் பக்கமே நா வராம பூடுவேன். அக்காங்.இன்னா பிரியுதா??

  ReplyDelete
 25. ///சி.பி.செந்தில்குமார் said...
  என்ன தம்பி திடீர்னு திருந்திட்டான்? அவ்வ்////

  புது வருசம் பொறக்கற வரைக்கும் அப்படித்தானாம்.....

  ReplyDelete
 26. ///கக்கு - மாணிக்கம் said...
  உனக்கும் நம்ம பன்னிக்கும் இன்னா சீக்ரெட்டு அக்ரீமேண்டா நைனா? ரெண்டு பேரும் மாத்தி மாத்தி அந்த ஆளு படத்த போட்டு ஏன் மென் மெர்ச்சல் பண்ணிகினுகீறீங்க? அடிக்கிற வெயில்ல நம்ம ஊர்ல எவனையா இம்மா நீட்டம் கோட்டு போட்டுகினுகீரான் ? அத்த பாத்தாலே பத்திகினு எரியுது மேன் இனிமே அந்த ஆளு படம் போட்டு பதிவு வுட்டுகினா உன் பக்கமே நா வராம பூடுவேன். அக்காங்.இன்னா பிரியுதா??//////

  ங்ணா...... அடுத்து சின்ன டாகுடர் படம் வர்ர வரைக்கும் இந்தப் பீசுதானுங்ணா....... (அண்ணே இதுக்கே கோச்சுக்கிட்டா அப்புறம் சாம் ஆண்டர்சன், டீஆர், ஜேகேஆர்னு ஏகப்பட்ட ஆளுக எங்க கைவசம் இருக்காங்களே, அதுக்கு என்ன பண்ண போறீங்க?

  ReplyDelete
 27. ////! சிவகுமார் ! said...
  // கரண்ட் கட் பத்துநாளைக்கு இருப்பதால் பதிவுலகம் வரமுடியாது என்பதை "நாய் நக்ஸ்"நக்கீரன் அண்ணன் பதிவுலக நண்பர்களுக்கு தெரியப்படுத்த சொன்னார்.......!!!//

  அப்பாட. தப்பிச்சது பதிவுலகம். கோடி கும்புடு./////

  யோவ் ஏன்யா சும்மா கெடந்த சங்க..... சரி விடுங்க..... விதிய யாரால மாத்த முடியும்?

  ReplyDelete
 28. ///மயிலன் said...
  இனிமே உங்களை பதிவுலக கேப்டன் என்று அன்போடு அழைப்போமாக...:)))))////

  அண்ணே எல்லாரும் உங்களை கேப்டன்னு சொல்லிட்டாங்கன்னு நீங்க பாட்டுக்கு யூனிஃபார்ம போட்டுக்கிட்டு ஆஃபடிக்க கெளம்பிடாதீங்கண்ணே.....

  ReplyDelete
 29. சரி, உங்களுக்கும் மற்ற நண்பர்கள் அனைவருக்கும் புதுவருச வாழ்த்துக்கள்ணே...

  ReplyDelete
 30. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய மனம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 31. மற்றும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 32. வணக்கம் அண்ணா,
  சம கால நாட்டு நடப்புக்களைத் தொகுத்தி தந்திருக்கிறீங்க.

  நடிகைகளின் டூ பீஸ் உடை தான் இதில் செம காமெடி பஞ்சாக மலந்துள்ளது.

  ReplyDelete
 33. பல தகவல் ,அறிந்து கொண்டேன் நண்பரே

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  அன்புடன் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பரே

  ReplyDelete
 34. பதிவிற்கும் தங்களுக்கும் இனியபுத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 35. இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடுமப்த்துக்கும் சொல்லிக்குறேன். மகிழ்ச்சி மட்டுமே உங்கள் குடும்பத்துக்கு உரித்தாக வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன் சகோதரரே

  ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!