Tuesday, September 6, 2011

புரியாத சில விஷயங்கள்...!!

௧ : பேப்பரில் ஸ்டேப்ளர் பின் அடிக்குமுன், நம் கை ஏன் முதலில் ஸ்டேப்ளர் இல்லாமலேயே ஆக்ஷன் செய்கிறது...?

௨ : சிபி பதிவு போடுமுன் ஏன் வாஸ்து பார்கிறான்....!!!???

௩ : நடிகைகளிடம்  உங்கள் கனவு கதாபாத்திரம் எது என கேட்கும் போது, விலைமாதுவாக நடிக்க ஆசை எனக் கூறும் விந்தை என்ன...!!??

௪ : சிறு பெண் குழந்தைகள், எது வாங்கினாலும் பிங்க் கலரை பார்த்து கேட்பது ஏன்...!!??

௫ : "கலியுகம்" தினேஷின் கவிதைகள் சிலருக்கு புரியவில்லையே ஏன்...!!!??

௬ : பைக்கில் போகும் போது, வலப்புறமாவது இடப்புறமாவது திரும்பும் போது இண்டிகேட்டரை போட்டுட்டு, கையையும் ஏன் காட்டுகிறார்கள்...!!!??

௭ : மூணாவது ரவுண்ட் மது அருந்திவிட்டு, பீரோ சாவியை ஒளித்து வைத்துவிட்டு, அடுத்தநாள் மறந்து போயி, தேடோ தேடுன்னு தேடிட்டு வெறுத்து போயி, அடுத்தநாள் மூணாவது ரவுண்டு மது குடித்ததும், ஆங்....
இங்கேதான் சாவியை வைத்தோம் என சரியாக கண்டுபிடிப்பத்தின் மாயம் என்ன..!!!??

௮ : டிஷ்யூ பாக்ஸில் ஒரு டிஸ்யூ எடுத்த கை துடைத்தாலே போதும், என்றாலும் சிலர் ரெண்டு மூன்று என உருவி கை துடைப்பது என்ன...!!??

௯ : முதலாளி போன் செய்யும் போது, தொண்டையை செருமிட்டே, தலையை அப்பிடிக்கா இப்பிடிக்கா ஆட்டிகிட்டு போனை எடுத்து பேசுவது என்ன...!!!??

௧௦ : முக்கியமான பதிவு போடும் அன்றைக்கு நெட் பெப்பே காட்டும் மர்மம் [[வேதனை]] என்ன...!!??

௧௧ : தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??

௧௨ : கவிதை பிடிக்காத நண்பர்கள், ஏன்....!!!??

௧௩ : சாயங்காலம் மது அருந்த போறவன், சென்ட், பவுடர் பூசிட்டு போயி, குடிச்சிட்டு வரும்போது, வேஷ்டி இல்லாமல் வருவது ஏன்...!!??

௧௪ : சோனியா காந்தி [[ப்பூப்ப் காந்தி பரம்பரை]] இப்போவெல்லாம் பேசுவதே இல்லையே ஏன்....!!??

௧௫ : மூனா கானா, தமிழக மக்களை சாபம் போடுறாரே அது ஏன்...!!!??

௧௬ : நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'ன்னு சொல்லிட்டு, ஒரு சார்பா செய்திகள் போட்டுட்டு இருக்காயிங்களே அது எப்பிடி..!!??

௧௭ : அக்கறைக்கு இக்கரை பச்சையா இருக்கே ஏன்...!!??

௧௮ : அண்ணா ஹசாரே'வுக்கு ஆதரவாக திரண்ட மக்களை பார்த்து, அருந்ததிராய் குற்றம் சுமத்துகிறாரே எப்பிடி...!!!??

௧௯ : ஸ்பெக்ட்ரம் சத்தமே இல்லாமல் முடங்கிடிச்சே என்னாச்சு...!!??

௨௦ : கையில் புது மோதிரம் போட்டது, எல்லாரும் கையை உயர்த்தி உயர்த்தி பேசுவது ஏன்...!!??



டிஸ்கி : எவம்லெய் அது மேலே உள்ளதை படிச்சிட்டு கல்லை தூக்குறது, ம்ஹும்....

76 comments:

  1. மக்கா.... ஏதோ புரியுது....ஆனா புரியல?????

    ReplyDelete
  2. வீடியோ விக்கியை வகை தொகை இல்லாமல் கலாய்க்கும் லேப் டாப் மனோவை வாழ்த்த வயசு பத்தாது, அதனால் காலில் விழாமல் வணங்குகிறேன்

    ReplyDelete
  3. தமிழ்வாசி - Prakash said...
    மக்கா.... ஏதோ புரியுது....ஆனா புரியல?????//



    ஹய்யோ ஹய்யோ நாசமாபோச்சி போ....

    ReplyDelete
  4. சி.பி.செந்தில்குமார் said...
    வீடியோ விக்கியை வகை தொகை இல்லாமல் கலாய்க்கும் லேப் டாப் மனோவை வாழ்த்த வயசு பத்தாது, அதனால் காலில் விழாமல் வணங்குகிறேன்//



    எலேய் அண்ணா, ராஸ்கல் என்னை எதுக்குடா தக்காளிகிட்டே மாட்டி விடுறே மூதேவி...

    ReplyDelete
  5. கலியுகம் தினேஷ் நம்ம நண்பன்,... அவரைப்போய்.. ச்சே ச்சே என்ன மனோ? ( பத்த வைடா பரட்டை .. ஆன் லைன்ல போடலாம் அரட்டை.. )

    ReplyDelete
  6. சி.பி.செந்தில்குமார் said...
    கலியுகம் தினேஷ் நம்ம நண்பன்,... அவரைப்போய்.. ச்சே ச்சே என்ன மனோ? ( பத்த வைடா பரட்டை .. ஆன் லைன்ல போடலாம் அரட்டை.. ) //



    காலையிலேயே தண்ணி கிண்ணியை போட்டுட்டியாடா ராஸ்கல், பிச்சிபுடுவேன் பிச்சி ஹி ஹி...

    ReplyDelete
  7. பைக்கில் போகும் போது, வலப்புறமாவது இடப்புறமாவது திரும்பும் போது இண்டிகேட்டரை போட்டுட்டு, கையையும் ஏன் காட்டுகிறார்கள்...!!!??

    சும்மா கூடுதல் பாதுகாப்புதான்.....

    அக்கறைக்கு இக்கரை பச்சையா இருக்கே ஏன்...!!??

    பலநாட்கள் மனதினில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி..
    விடைமட்டும் தெரியவில்லை.

    கேள்விகள் கணைகளாய்.......

    ReplyDelete
  8. முத்தினது (கலி மட்டுமா!) தெரியாமலேயே பதிவு போடுறாங்களே எப்படி ஹிஹி!

    ReplyDelete
  9. //
    சிபி பதிவு போடுமுன் ஏன் வாஸ்து பார்கிறான்....!!!???
    //
    அவர் தோஸ்து நீங்க சரியில்லை .. அதான்

    ReplyDelete
  10. //
    தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??
    //
    அதை படிக்கும் நம்ம நிலைமை என்ன ?

    ReplyDelete
  11. /டிஷ்யூ பாக்ஸில் ஒரு டிஸ்யூ எடுத்த கை துடைத்தாலே போதும், என்றாலும் சிலர் ரெண்டு மூன்று என உருவி கை துடைப்பது என்ன//

    புறங்கையால கூட வளச்சி வளச்சி சாப்புட்டு இருப்பாங்க..

    ReplyDelete
  12. /தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன//

    அதை படிப்பவரின் மனநிலை என்ன..?

    ReplyDelete
  13. மகேந்திரன் said...
    பைக்கில் போகும் போது, வலப்புறமாவது இடப்புறமாவது திரும்பும் போது இண்டிகேட்டரை போட்டுட்டு, கையையும் ஏன் காட்டுகிறார்கள்...!!!??

    சும்மா கூடுதல் பாதுகாப்புதான்.....

    அக்கறைக்கு இக்கரை பச்சையா இருக்கே ஏன்...!!??

    பலநாட்கள் மனதினில் கேட்டுக்கொண்டிருக்கும் கேள்வி..
    விடைமட்டும் தெரியவில்லை.

    கேள்விகள் கணைகளாய்.......

    //

    நன்றி மகேந்திரன்..

    ReplyDelete
  14. விக்கியுலகம் said...
    முத்தினது (கலி மட்டுமா!) தெரியாமலேயே பதிவு போடுறாங்களே எப்படி ஹிஹி!//



    அடடா ஆரம்பிச்சாச்சா....

    ReplyDelete
  15. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    //
    சிபி பதிவு போடுமுன் ஏன் வாஸ்து பார்கிறான்....!!!???
    //
    அவர் தோஸ்து நீங்க சரியில்லை .. அதான்//

    வாஸ்துக்கும் தோஸ்த்க்கும் என்னைய்யா சம்பந்தம் ஹி ஹி...

    ReplyDelete
  16. என் ராஜபாட்டை"- ராஜா said...
    //
    தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??
    //
    அதை படிக்கும் நம்ம நிலைமை என்ன ?//

    கோவிந்தா கீழ்பாக்கம்....

    ReplyDelete
  17. சிவகுமார் ! said...
    /டிஷ்யூ பாக்ஸில் ஒரு டிஸ்யூ எடுத்த கை துடைத்தாலே போதும், என்றாலும் சிலர் ரெண்டு மூன்று என உருவி கை துடைப்பது என்ன//

    புறங்கையால கூட வளச்சி வளச்சி சாப்புட்டு இருப்பாங்க..//

    அனுபவம் என்னமா பேசுதுய்யா...

    ReplyDelete
  18. சிவகுமார் ! said...
    /தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன//

    அதை படிப்பவரின் மனநிலை என்ன..?//



    எலேய் கொன்னியா சிபி, நோட் திஸ் ஹி ஹி...

    ReplyDelete
  19. \\\அக்கறைக்கு இக்கரை பச்சையா இருக்கே ஏன்...!!??\\\ அங்கேயும் ஒண்ணு பிக் அப் ஆகிடுச்சா ?

    ReplyDelete
  20. இவ்வளவு ஏன் கேட்டா நான் எந்த ஏன்-க்கு பதில் சொல்றது...

    ReplyDelete
  21. மனோ இவ்வளவு யோசிக்காசிங்க...
    யோசிச்சா புதுசு புதுசா நோய்கள் வரதா தகவல்கள் வந்துகிட்டு இருக்கு...

    அப்புறம் தெளிவா இருக்கற ஆள் நீங்க ஒருத்தர்தான்...

    உங்களையும் இழக்க நாங்க தயாராக இல்லை....

    ReplyDelete
  22. இத்தனை ஏன் களும் என்மனதிலும் ஓடுது .

    இது எல்லாத்துக்கும் பதில் எழுதுனா கிட்டத்தட்ட ஏகப்பட்ட பதிவு போடலாம் நண்பரே.

    ஹா ஹா

    ReplyDelete
  23. //௧௧ : தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??
    //


    வேறென்ன??
    கவலைக்குரியது தான்..

    ReplyDelete
  24. சிவகுமார் ! said...
    /தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன//

    அதை படிப்பவரின் மனநிலை என்ன..?//



    எலேய் கொன்னியா சிபி, நோட் திஸ் ஹி ஹி...

    ////// ஹா ஹா ஹா சிபி என்னது இது மனோ அண்ட் கோ உங்களை இப்படி கலாய்க்கிறாங்க..:)

    ReplyDelete
  25. ஆமா மாப்ள எனக்கும் இதெல்லாம் புரியவே மாட்டேங்குது?

    ReplyDelete
  26. அந்த மோதிரம் உனக்கு நடந்த அனுபவம் தானே?

    ReplyDelete
  27. தினம் ஆறு பதிவா யார்யா அது?

    ReplyDelete
  28. //தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??//

    இது அவுங்களுக்கே தெரியாது...

    ReplyDelete
  29. // "கலியுகம்" தினேஷின் கவிதைகள் சிலருக்கு புரியவில்லையே ஏன்...!!!??//


    அந்த பாதிக்கப்பட்ட சிலரில் நானும் இருக்கிறேன்..

    ReplyDelete
  30. லேப் டாப் மனோ???? ha haa..

    ReplyDelete
  31. // தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??//


    அதிகம் நேரமிருப்பதால் பதிவிடுகிறார்கள்.., நேரமிருப்பவர்கள் படிக்கிறார்கள்..(ஹிட்ஸ் மேனியா தாக்கம் தான்)

    ReplyDelete
  32. ஒண்ணே ஓண்ணு நல்லா புரிஞ்சுது.பரிட்சை பேப்பர் மாதிரி நிறையா ஏன்? அப்படின்னு கேள்வி கேட்டிருக்கீங்க.
    எங்களுக்கு பதில்தான் தெரியலை.

    ReplyDelete
  33. அண்ணே!
    காக்கா உக்காரப் பணம் பழம் விழுதே...
    அது ஏன்னே?

    ReplyDelete
  34. ஏலே இதே டவுட்டு தான்லே எனக்கும்.

    ReplyDelete
  35. இன்று முதல் உங்களை தொந்தரவு செய்வேன்.. அட போலோ பண்ணுறன் பாஸ்.

    ReplyDelete
  36. கவிதை வீதி # சௌந்தர் said...
    இவ்வளவு ஏன் கேட்டா நான் எந்த ஏன்-க்கு பதில் சொல்றது...//


    விடுறதா இல்லை பதில் சொல்லிய ஆகணும்..

    ReplyDelete
  37. # கவிதை வீதி # சௌந்தர் said...
    மனோ இவ்வளவு யோசிக்காசிங்க...
    யோசிச்சா புதுசு புதுசா நோய்கள் வரதா தகவல்கள் வந்துகிட்டு இருக்கு...

    அப்புறம் தெளிவா இருக்கற ஆள் நீங்க ஒருத்தர்தான்...

    உங்களையும் இழக்க நாங்க தயாராக இல்லை....//

    இருலேய் கொஞ்சம் அருவாளை தீட்டிட்டு வாரேன்...

    ReplyDelete
  38. இதெல்லாம் புரிஞ்சுட்டா, அப்றம் யோசிக்க வேற ஒண்ணுமே இருக்காதே,.. அதான் இன்னும் புரியாம இருக்கு :-)))

    ReplyDelete
  39. M.R said...
    இத்தனை ஏன் களும் என்மனதிலும் ஓடுது .

    இது எல்லாத்துக்கும் பதில் எழுதுனா கிட்டத்தட்ட ஏகப்பட்ட பதிவு போடலாம் நண்பரே.

    ஹா ஹா//

    போட்டு தாளிங்க மக்கா...

    ReplyDelete
  40. இந்திரா said...
    //௧௧ : தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??
    //


    வேறென்ன??
    கவலைக்குரியது தான்..//

    கீழ்பாக்கம் பக்கமா கொண்டு போயிருவோம் ஹே ஹே ஹே..

    ReplyDelete
  41. பாஸ் எல்லாமே எனக்கும் இருக்கும் டவுட் தான்,
    சேம் சேம் பப்பி சேம்
    அவ்வவ்

    ReplyDelete
  42. தேனம்மை லெக்ஷ்மணன் said...
    சிவகுமார் ! said...
    /தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன//

    அதை படிப்பவரின் மனநிலை என்ன..?//



    எலேய் கொன்னியா சிபி, நோட் திஸ் ஹி ஹி...

    ////// ஹா ஹா ஹா சிபி என்னது இது மனோ அண்ட் கோ உங்களை இப்படி கலாய்க்கிறாங்க..:)//


    ஹா ஹா ஹா ஹா சிபி வசமா மேடம்'கிட்டே மாட்டிகிட்டான் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  43. வேடந்தாங்கல் - கருன் *! said...
    ஆமா மாப்ள எனக்கும் இதெல்லாம் புரியவே மாட்டேங்குது?//



    அட வாத்தி இதெல்லாம் தெரியாமதான் பதிவர் சந்திப்புக்கு போனீரா...?

    ReplyDelete
  44. ///நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'ன்னு சொல்லிட்டு, ஒரு சார்பா செய்திகள் போட்டுட்டு இருக்காயிங்களே அது எப்பிடி..!!??///

    இதை நக்கீரனார் உணர மாட்டேன் என்கிறாரே????????
    இதெல்லாம் சுரணை கேட்ட ஜென்மம் என்று நினைக்குறேன்.

    ReplyDelete
  45. வேடந்தாங்கல் - கருன் *! said...
    அந்த மோதிரம் உனக்கு நடந்த அனுபவம் தானே?//

    ஹி ஹி நான் நகை அணிவதில்லை வாத்தி...

    ReplyDelete
  46. Rathnavel said...
    அருமை மனோ.//

    மிக்க நன்றி அய்யா...

    ReplyDelete
  47. வேடந்தாங்கல் - கருன் *! said...
    தினம் ஆறு பதிவா யார்யா அது?//

    அது சொல்லித்தான் தெரியனுமா என்ன ஹி ஹி...

    ReplyDelete
  48. நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான்
    ஆனா ஏன்னுதான் புரியலை

    ReplyDelete
  49. சங்கவி said...
    //தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??//

    இது அவுங்களுக்கே தெரியாது...//



    ஹா ஹா ஹா ஹா...

    ReplyDelete
  50. பாரத்... பாரதி... said...
    // "கலியுகம்" தினேஷின் கவிதைகள் சிலருக்கு புரியவில்லையே ஏன்...!!!??//


    அந்த பாதிக்கப்பட்ட சிலரில் நானும் இருக்கிறேன்..//

    அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்.....

    ReplyDelete
  51. பாரத்... பாரதி... said...
    லேப் டாப் மனோ???? ha haa..

    September 6, 2011 3:22 AM

    பாரத்... பாரதி... said...
    // தினம் ஆறேழு பதிவு போடும் பதிவர்களின் மனநிலை என்ன...!!!??//


    அதிகம் நேரமிருப்பதால் பதிவிடுகிறார்கள்.., நேரமிருப்பவர்கள் படிக்கிறார்கள்..(ஹிட்ஸ் மேனியா தாக்கம் தான்)//

    மேனியாவா சோனியாவா ஹி ஹி...

    ReplyDelete
  52. RAMVI said...
    ஒண்ணே ஓண்ணு நல்லா புரிஞ்சுது.பரிட்சை பேப்பர் மாதிரி நிறையா ஏன்? அப்படின்னு கேள்வி கேட்டிருக்கீங்க.
    எங்களுக்கு பதில்தான் தெரியலை.//

    ஹா ஹா ஹா ஹா மாட்னீங்களா...?

    ReplyDelete
  53. வெளங்காதவன் said...
    அண்ணே!
    காக்கா உக்காரப் பணம் பழம் விழுதே...
    அது ஏன்னே?//



    அவ்வ்வ்வ் உங்க பெயரை பார்த்தாலே பயமா இருக்கே...!!

    ReplyDelete
  54. KANA VARO said...
    ஏலே இதே டவுட்டு தான்லே எனக்கும்.

    September 6, 2011 3:54 AM

    KANA VARO said...
    இன்று முதல் உங்களை தொந்தரவு செய்வேன்.. அட போலோ பண்ணுறன் பாஸ்.//

    வெல்கம் வெல்கம்...

    ReplyDelete
  55. அமைதிச்சாரல் said...
    இதெல்லாம் புரிஞ்சுட்டா, அப்றம் யோசிக்க வேற ஒண்ணுமே இருக்காதே,.. அதான் இன்னும் புரியாம இருக்கு :-)))//


    இப்பிடிக்கா இருந்தா அப்பிடிக்கா இருக்காதுன்னு சொல்றீங்க ம்ம்ம் சரி...

    ReplyDelete
  56. துஷ்யந்தன் said...
    பாஸ் எல்லாமே எனக்கும் இருக்கும் டவுட் தான்,
    சேம் சேம் பப்பி சேம்
    அவ்வவ்//

    அவ்வ்வ்வவ் முடியல...

    ReplyDelete
  57. துஷ்யந்தன் said...
    ///நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே'ன்னு சொல்லிட்டு, ஒரு சார்பா செய்திகள் போட்டுட்டு இருக்காயிங்களே அது எப்பிடி..!!??///

    இதை நக்கீரனார் உணர மாட்டேன் என்கிறாரே????????
    இதெல்லாம் சுரணை கேட்ட ஜென்மம் என்று நினைக்குறேன்.//

    சுரணை கிலோ என்னா விலை...?

    ReplyDelete
  58. Ramani said...
    நீங்கள் சொல்வது எல்லாமே சரிதான்
    ஆனா ஏன்னுதான் புரியலை//

    அய்யய்யோ குருவும் மாட்டிக்கிட்டார் ஹே ஹே ஹே ஹே...

    ReplyDelete
  59. Ramani said...
    த்.ம 13//

    நன்றி குரு...

    ReplyDelete
  60. ///MANO நாஞ்சில் மனோ said...

    வெளங்காதவன் said...
    அண்ணே!
    காக்கா உக்காரப் பணம் பழம் விழுதே...
    அது ஏன்னே?//



    அவ்வ்வ்வ் உங்க பெயரை பார்த்தாலே பயமா இருக்கே...!!
    ////

    பயமாவா?
    நான் அம்புட்டு வோர்த்து எல்லாம் கெடையாது தல..... டம்மி பீசு....

    ReplyDelete
  61. வெளங்காதவன் said...
    ///MANO நாஞ்சில் மனோ said...

    வெளங்காதவன் said...
    அண்ணே!
    காக்கா உக்காரப் பணம் பழம் விழுதே...
    அது ஏன்னே?//



    அவ்வ்வ்வ் உங்க பெயரை பார்த்தாலே பயமா இருக்கே...!!
    ////

    பயமாவா?
    நான் அம்புட்டு வோர்த்து எல்லாம் கெடையாது தல..... டம்மி பீசு....//

    இருந்தாலும் அவ்வ்வ்வவ்.....

    ReplyDelete
  62. பெரிய லிஸ்ட்!என்ன பதில் சொல்ல?

    ReplyDelete
  63. சென்னை பித்தன் said...
    பெரிய லிஸ்ட்!என்ன பதில் சொல்ல? //

    ஹா ஹா ஹா ஹா நீங்களும் மாட்னீங்களா...

    ReplyDelete
  64. யதார்த்தமான விடயங்கள் தான், ஆனால் எனக்கும் சில விடயங்கள் புரியாமல் தான் இருக்கு பாஸ்.

    ReplyDelete
  65. புரியாத சில விஷயங்கள்...!!

    புரியாத வரை தான் சிலது அழகு...நான் சி பி த்வீத் பற்றி சொல்லல...-:)

    ReplyDelete
  66. நல்லத்தான் மாப்பூ பலதை ஆராய்ந்து அராட்சி செய்திருக்கு எனக்கும் சிலது புரியுது இல்லை முக்கியமாக நடிகைகள் விலைமாதாக நடிக்கும் ஆசை, வேட்டி தொலைத்து வரும் சண்டியர்!ஹீ ஹீ!

    ReplyDelete
  67. ஸ்பெக்ட்ரம் சத்தமே இல்லாமல் முடங்கிடிச்சே என்னாச்சு...!!??

    அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ், எடியூரப்பா, ரெட்டி பிரதர்ஸ், அமர்சிங், தமிழக முன்னால் அமைச்சர்கள் இவங்க எல்லாருமா சேந்து கூட்டு சதி செய்து 2G சத்தமே இல்லாம முடக்கிடாங்க....

    செப்டம்பர் 15 – ல மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதுதான் தெரியும் இவர்களின் கூட்டு சதி முறியடிக்கப்பட்டதா? இல்லையா என்று..

    ReplyDelete
  68. நிரூபன் said...
    யதார்த்தமான விடயங்கள் தான், ஆனால் எனக்கும் சில விடயங்கள் புரியாமல் தான் இருக்கு பாஸ்.//



    ஹா ஹா ஹா ஹா அடப்பாவி....

    ReplyDelete
  69. ரெவெரி said...
    புரியாத சில விஷயங்கள்...!!

    புரியாத வரை தான் சிலது அழகு...நான் சி பி த்வீத் பற்றி சொல்லல...-:)//

    சிபி'யை பற்றி நீங்க சொல்லலைன்னா நான் சொல்லுவேன் ஹி ஹி...

    ReplyDelete
  70. Nesan said...
    நல்லத்தான் மாப்பூ பலதை ஆராய்ந்து அராட்சி செய்திருக்கு எனக்கும் சிலது புரியுது இல்லை முக்கியமாக நடிகைகள் விலைமாதாக நடிக்கும் ஆசை, வேட்டி தொலைத்து வரும் சண்டியர்!ஹீ ஹீ!//

    வேஷ்டி தொலைச்ச அனுபவம் உண்டா...?

    ReplyDelete
  71. குடிமகன் said...
    ஸ்பெக்ட்ரம் சத்தமே இல்லாமல் முடங்கிடிச்சே என்னாச்சு...!!??

    அண்ணா ஹசாரே, பாபா ராம்தேவ், எடியூரப்பா, ரெட்டி பிரதர்ஸ், அமர்சிங், தமிழக முன்னால் அமைச்சர்கள் இவங்க எல்லாருமா சேந்து கூட்டு சதி செய்து 2G சத்தமே இல்லாம முடக்கிடாங்க....

    செப்டம்பர் 15 – ல மூன்றாவது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும்போதுதான் தெரியும் இவர்களின் கூட்டு சதி முறியடிக்கப்பட்டதா? இல்லையா என்று..//


    வருகைக்கு மிக்க நன்றி...

    ReplyDelete
  72. ரூம் போட்டு யோசிச்சு இருக்கீங்க என்று புரிகிறது.

    ReplyDelete
  73. ஐயோ...அம்புட்டும் உண்மைதானுங்கோ..

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!