Thursday, December 15, 2011

உன் நினைவு என்னை சுடுகிறது....!!!



உன் நினைவு
சுடுகிறது தீயாய்
குளித்தாலும்
குடித்தாலும் தாகம்
தணியவில்லையடி...
உன்னை மறக்க
நினைக்கும் நினைவலைகள்
உன்னோடு சாம்பலாகி விட்டதோ
ஆழியில் கரைந்து விட்டதோ...
உன்மத்தம் பிடித்தவனாய்
இருப்பது போல் உணர்கிறேன்
உன் நினைவின் நிறைவு
என்னை ஆட்கொண்டுள்ளது ரணமாக...
எனை துடிக்க வைத்து விட்டு
நீ துடித்து மடிந்தாயே
அந்த கணம்
என்னுயிரும் போகாமல் காத்தவளே....
உன் நினைவை சுமந்து
தினம் தினம்
நான் எரிந்து போவதற்கா
என்னை உயிரோடு வாழ விட்டாய்....
நீ வாங்கிய சத்தியம்
என்னில் எரிமலையாய்
அது நான் உறங்கும்
கல்லறையிலும் தொடரும்...
இதற்க்கு [நமக்கு]
சாட்சியாக அந்த
ஒற்றை பனை மரம்
ஜீவித்தும்  இருக்கும்....

உன் நினைவில் என்றும் நான்......

41 comments:

  1. மனோ என்னை கொல்லாத (ஜில்லு என்ன கொல்லாத!)

    ReplyDelete
  2. பாட்டாவே பாடிட்டயா :-)

    ReplyDelete
  3. கவிதையில் சோகம் இழையோடுகிறது..
    சிறப்பு..

    ReplyDelete
  4. மெல்லிய மலர்களுக்கு இடையில், மலரினும் மெல்லிய வரிகள்.அருமை..

    ReplyDelete
  5. மனச என்னமோ பண்றீங்க..

    ReplyDelete
  6. மனோ...ஏனோ உங்கள் பதிவில் இந்தச் சோகம் பொருத்தமில்லாமல்
    இருக்கிறது !

    ReplyDelete
  7. மெல்லிய மனதின் சோகங்களைமென்மையான மலர்களின் பின்னணியில் இனிமையாக பதிவிட்டுள்ளீர்கள்.

    ReplyDelete
  8. "உன் நினைவை சுமந்து
    தினம் தினம்
    நான் எரிந்து போவதற்கா
    என்னை உயிரோடு வாழ விட்டாய்...."

    சத்யமான வரிகள்....... காதலின் சோகம்...... கவிதை சூப்பர்.....................

    இங்கேயும் காதல் தான், உங்க கருத்த சொல்லுங்க

    காதல் - காதல் - காதல்

    ReplyDelete
  9. படங்கள் அழகு........

    இங்கேயும் காதல் தான், உங்க கருத்த சொல்லுங்க

    காதல் - காதல் - காதல்

    ReplyDelete
  10. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

    Visit Here: http://adf.ly/4FKbj

    ReplyDelete
  11. World No.1 Money Making Site. 100% Without Investment Job.

    Visit Here: http://adf.ly/4FKbj

    ReplyDelete
  12. மனோவா இது?ஒரு புதிய முகம்!

    ReplyDelete
  13. என்ன தலைவரே ...இப்புடி எழுதிபுட்டீங்க...கொன்னுட்டீக..

    என் வலையில்...அவள் அதுவாம்...!...

    ReplyDelete
  14. நீ காதல் மன்னன்யா..... (ஆமா இது எத்தனாவது?)

    ReplyDelete
  15. அட கிறுக்கு ......நாலு பதிவு நல்ல படி போட்டுட்டு மறுபடியும் முருங்கை மரம் ஏறி உக்காந்துகினுமா?

    ReplyDelete
  16. நாஞ்சில் மனோவை பதிவர்கள் அனைவரும்
    ஜாலியாகத்தான் பார்க்கவிரும்புகிறோம்
    சோக கீதம் தங்களுக்கு என்றும் வேண்டாம்
    நன்றாகவும் இல்லை

    ReplyDelete
  17. அட.. கவிதையில் கூட இந்த மனோ கலக்குறாறே...

    ஓவர் பீலிங் ஒடம்புக்கு ஆகாது மனோ...

    ReplyDelete
  18. ///////
    பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips [Reply To This Comment]

    நீ காதல் மன்னன்யா..... (ஆமா இது எத்தனாவது?)

    ////////


    சாரு கணக்குல கொஞ்சம் வீக்கு...
    இதிலெல்லாம் கணக்கு கேட்டுகிட்டு...

    ReplyDelete
  19. //////
    Online Works For All said...

    World No.1 Money Making Site. 100% Without Investment Job.

    Visit Here: http://adf.ly/4FKbj
    ///////


    யோவ் என்னய்ய உன் போராட்டம்...

    ReplyDelete
  20. மக்கா,பல பரிமாணங்களில் கலக்குறிங்க.

    ReplyDelete
  21. அங்கிள், என்ன ஆச்சு??? ஒரே ஃபீலிங்ஸா இருக்கு.
    super kavithai.

    ReplyDelete
  22. கவிதை அருமை நண்பரே
    ஆனால் சோகம் கவிதையில் மட்டும் இருக்கட்டும் ,எம்முடைய நண்பர் மனோவின் மனதினுள் வேண்டாம்

    ReplyDelete
  23. குடித்தாலும் தாகம்
    தணியவில்லையடி...
    >>
    அண்ணே தாகம்னா தண்ணி குடிச்சாதான் தீரும். பீர் எத்தனை பாட்டில் குடிச்சாலும் தாகம் தீராதுங்கண்ணா.

    ReplyDelete
  24. உன்மத்தம் பிடித்தவனாய்
    இருப்பது போல் உணர்கிறேன்
    >>>>
    அது உங்களுக்கே தெரிஞ்சுடுச்சா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  25. அண்ணே பஹ்ரைன்ல எதாவது காதலில் விழுந்துட்டிங்களா? அண்ணிக்கு போன் போடவா?

    ReplyDelete
  26. மக்கா திடீர்னு இப்படி ஆயிடிங்களே? படங்கள் கண்ணுக்கு குளிர்ச்சி...

    ReplyDelete
  27. கக்கு - மாணிக்கம் said...
    அட கிறுக்கு ......நாலு பதிவு நல்ல படி போட்டுட்டு மறுபடியும் முருங்கை மரம் ஏறி உக்காந்துகினுமா?
    >>>>
    இதான் மனோவின் ஒரிஜினல் பதிவு. மத்ததெல்லாம் யாரோ மண்டபத்துல எழுதிக் குடுத்த்தை போஸ்ட் பண்ணியிருக்கான்

    ReplyDelete
  28. ''...உன் நினைவு
    சுடுகிறது தீயாய்
    குளித்தாலும்...''
    நினைவு குளிரவல்லவோ வேண்டும்!...ஏன் சுடுது!......
    ரொம்பப் பித்தம் ஏறின காதல் போலும்...ம்...ம்...
    வாழ்த்துகள்.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
  29. மலர்கள் அனைத்தும் அழகு...

    ReplyDelete
  30. /////உன்மத்தம் பிடித்தவனாய்
    இருப்பது போல் உணர்கிறேன்
    உன் நினைவின் நிறைவு
    என்னை ஆட்கொண்டுள்ளது ரணமாக...////


    அசத்தல் குறுங்கவிதை மக்களே..

    ReplyDelete
  31. வணக்கம் மனோ அண்ணா !
    நலமா கொஞ்சம் தேடல் அதிகம் விரைவில்  தொடர்ந்து வருவேன்!
    காதலில் கரைந்து உருகி எழுதிய வரிகளில்
    /நீ வாங்கிய சத்தியம்
    என்னில் எரிமலையாய்/ தூள் கிளப்பிய வரிகள் வலியின் ஆழத்தைச் சொல்லும் இடம் !

    ReplyDelete
  32. கறுப்புக் கண்ணாடியின் பின்னும். ஒரு கல்லறை இருக்கு அடிமனதில்! என்பதைச் சொல்லிச் செல்லும் கவிதை அழகு மனோ!
    மீண்டும் முடிந்தளவு வருவேன் தேடி !

    ReplyDelete
  33. என்ன பாஸ் இது புதுசா இருக்கு..... மனோ சார் இப்படியும் பதிவு போடுவாரா??? அவர் லொள்ளுத்தானே எனக்கு தெரியும்... அவ்வவ்...
    கவிதையில் மெல்லிய சோகம் இழையோடுவது அழகு..... சுக ராகம் சோகம் தானே..... சூப்பர் மனோ பாஸ்

    ReplyDelete
  34. meeeeeeeeeeeeeeeee the firstu coment

    anney kavithai super...

    anniyanukul oru ambi....

    Laptop Manovukul oru Kavithai Puyal...

    valga valamudan..

    ReplyDelete
  35. ஒத்தைபனை மரம் பலரின் காதல் கதை சொல்லும்....முக்கியமாக தோல்வியில் முடிந்த காதல் கதைகளை தன்னுள் அடக்கி வைத்திருக்கும் கல்லறை.கவிதை அருமை

    ReplyDelete
  36. பூ
    பூவா
    பூத்திருக்கு...

    நினைவுகளும்!

    ReplyDelete
  37. வாவ்.. யாரு இந்தக் கவிதைக்குச் சொந்தக்காரி.(மனைவின்னு சொல்வார், பாருங்க)அருமை மனோ

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!