Wednesday, May 23, 2012

350 ஆண்டுகள் பழமையான அரண்மனை....!!!

நான் ஊரில் இருக்கும்போது ஒருநாள் என் குடும்பத்தையும் அழைத்து கொண்டு திற்பரப்பு அருவிக்கு போலாம்னு பிளான் பண்ணியதும் விஜயன் நியாபகம் வரவே, போன் போட்டு கேட்டேன் வாங்கய்யா குடும்பமா அருவிக்கு போயி குளிச்சுட்டு வரலாம்னு கேட்டேன், முதலில் ஐயோ வேலை இருக்கேன்னு மறுத்து விட்டு, கொஞ்ச நேரத்தில் அவரே போன் பண்ணினார் நானும் குடும்பமாக வருகிறேன் என்றார்.

நாகர்கோவில் போயி, விஜயன் வீட்டுக்கும் குடும்பமாக போயி தேநீர் அருந்திவிட்டு கிளம்பும்போது, திற்பரப்பு போயிட்டு அப்பிடியே பத்பனாபபுரம் அரண்மனையையும் பார்க்கலாமா என்றதும் விஜயன், அந்த அரண்மனையில பார்க்க ஒன்னுமே இல்லைய்யா ஒரே ஒரு கட்டில்தான் அங்கே இருக்கு வேறே விஷேசம் ஒன்னும் அங்கே இல்லை என்றார்.

ஒரு நண்பர் என்னை அடிக்கடி திட்டுவதை விஜயனிடம் சொன்னேன், டேய் நீ கன்னியாகுமரி மாவட்டத்தையே சுற்றி பார்க்காதவன், அப்புறம் எப்பிடிடா தமிழ்நாட்டை பற்றி [[முல்லைப்பெரியார்]] பிளாக் எழுதலாம் என அடிக்கடி கேட்பார். அதை சொன்னதும் கொஞ்சம் யோசிச்சவர், சரி தலைவரே சரி அப்போ நாம முதல்லயே அரண்மனையை பார்க்க போவோம் ஏன்னா அருவிக்கு போயிட்டு வரும்போது இங்கே கேட்டை பூட்டி விடுவார்கள் என்றதும் கார் வேகம் எடுத்தது அரண்மனை நோக்கி....!!!

கன்னியாகுமரி மாவட்டம், பத்பனாபபுரம் அரண்மனை......அங்கே என்னய்யா இருக்கு என்று கிண்டல் பண்ணிய விஜயனே ஆச்சர்யமாகி விட்டார், ஏ யப்பா வெளியே இருந்து பார்க்கும் போது சிறியதாக தோற்றம் அளிக்கும் அரண்மனை உள்ளே போக போக விரிந்து கொண்டே போகிறது பல பல ஆச்சர்யங்களுடன், வாழ்க்கையில் கேமராவில் அம்புட்டு போட்டோ எடுத்து தள்ளியது இதுவே முதல்முறை என்றார் விஜயன்....!!!!

இந்த அரண்மனை கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்தாலும் கேரளா அரசாங்கம்தான் இதை நடத்துகிறது எல்லாமே அவர்கள் கண்ட்ரோல்தான், என்னய்யா விஜயன் கைடுகள் எல்லாருமே மலையாளிகளாக இருக்கிறார்களே'ன்னு கேட்டதும் விஜயன், யோவ் கேரளா கவர்மென்ட் கண்ட்ரோல்ல இருந்தா பின்னே மலையாளியை வேலைக்கு வைக்காம தமிழனையா வைப்பான், அவன் என்ன தமிழன் போல இளிச்சவாயனா..? நான் ங்கே......[[கலாயிசிட்டாராமாம்]]

இந்த அரண்மனை 350 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும் அல்லாமல் முழுக்க முழுக்க மரத்தால் செய்யப்பட்டதாகும், இது திருவிதாங்கூர் மன்னர்களால் கட்டப்பட்டது...!!!

இந்த அரண்மனை பக்கத்தில்தான் உதயகிரி கோட்டை இருக்கு, அது தமிழக கண்ட்ரோல்ல இருப்பதால் பராமரிப்பு இல்லாமல் இருப்பதாக தம்பி "மாப்பிளை"ஹரீஷ் சொன்னான், அது மட்டுமில்லை அங்கே இப்போ பலான விஷயங்கள் நடப்பதாகவும் சொல்லி மிரள வைத்தான் [[கொய்யால வாழ்க தமிழகம்]]

சரி இனி விஜயன் எடுத்த படங்களும் விளக்கமும் தருகிறேன் தப்பாக இருந்தால் கமெண்டில் தெரிவிக்கலாம், நானும் தெரிந்து கொள்கிறேன்.


 அரண்மனை உள்ளே...

 உப்பு போட்டு வைக்கும் பாத்திரம் [[பலகையில்]]


 மாவும், மசாலாவும் ஆட்டும் உரல்கள்....!!

 பருப்பும், சாம்பாரும் கொட்டி வைக்கும் கல்லால் ஆன பாத்திரங்கள்..!

 ஒரே கல்லால் செய்யப்பட்ட தண்ணீர் தொட்டி...!

 ஆச்சர்யங்களை ரசிக்கும் நான்....!

 அரண்மனை முன் நிற்பது சந்தனம் மரம் செடியாக...!

 அழகு சிற்பங்கள்....!

 நவராத்திரி கொலு மண்டபம், ராணிகளும், இளவரசிகளும் கொண்டாடும் இடம்...!!


 என் மகனை விட்டு இறங்கவே மாட்டேன் என்று ஓட்டிக்கொண்ட விஜயனின் மகள் மோனிஷா குட்டி...!

 அழகு சிற்பம்...!

 அவர்கள் உபயோகித்த அம்மியும், உரலும்...!

 அரண்மனைக்கு வெளியே இளநீர் கடை.

 அரண்மனை முகப்பு...!!


வித்தியாசமாக யாரும் எடுக்காத கோணத்தில் போட்டோ எடுத்துள்ளார் விஜயன், இது திற்பரப்பு அருவி....!!!

டிஸ்கி : போட்டோக்களுக்கு நன்றி விஜயனுக்கு.

போட்டோக்கள் இன்னும் தொடரும்.......


20 comments:

  1. நன்றிங்க அண்ணே!

    ReplyDelete
  2. காரைக்குடி செட்டியார் பங்களா மாதிரி. அடுத்த முறை வந்தால் நிச்சயம் சென்று காணவேண்டும். படங்களின் பகிர்வுகள் தொடரட்டும் மனோ. அற்புதமாக உள்ளது. உள்ளே உள்ள படங்கள் நிறைய போடுங்களேன்..

    ReplyDelete
  3. ங்கொய்யால, 2 பேரும் அண்ணேன்னா இன்னா அர்த்தம்?

    ReplyDelete
  4. அய் எங்க அண்ணன் தங்க கண்ணன் வந்துட்டார் பராக் பராக் பராக்....!!!

    ReplyDelete
  5. வலைச்சரத்திற்கு வாங்கோ (;

    http://blogintamil.blogspot.com/2012/05/blog-post_24.html

    ReplyDelete
  6. ஸ்ரீவிஜி சொன்னதுபோலவேத்தான் எனக்கும்,காரைக்குடி செட்டியார் வீடோன்று உள்ளே இதேபோலத்தான் இருந்தது!நல்ல இன்ஃபோ மனோ!காமேராமேனுக்கும் நன்றிகள்(இருந்தாலும் அங்கே ஒரு கட்டில் மட்டுமேன்னு,உங்களை தடுக்க நினைத்த அந்த முயற்சியை??)

    ReplyDelete
  7. நீங்க குளிகுற போட்டோ எங்கே ?

    ReplyDelete
  8. ஆச்சர்யங்களை ரசிக்கும் நான்....!///
    ஒரு கணவனும் மனைவியும் பேசிக்கொண்டிருப்பது ஆச்சர்யமா.... அதை நீர் பார்த்துகொண்டிருப்பது கூட ஒரு செய்தியா???? அடப்பாவிகளா உங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லையா....

    ReplyDelete
  9. >>அரண்மனைக்காவலன்??

    :)

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு சார் ! படங்கள் அருமை ! தொடருங்கள் !

    ReplyDelete
  11. எப்புடி வாழ்ந்திருக்காங்க ..?

    ReplyDelete
  12. முளகு மூடில் இருந்தபோது பார்க்காமல் விட்டு விட்டோமே என்று வருந்த வைத்து விட்டீர்கள்!

    ReplyDelete
  13. முளகு மூடில் இருந்தபோது பார்க்காமல் விட்டு விட்டோமே என்று வருந்த வைத்து விட்டீர்கள்!

    ReplyDelete
  14. முளகு மூடில் இருந்தபோது பார்க்காமல் விட்டு விட்டோமே என்று வருந்த வைத்து விட்டீர்கள்!

    ReplyDelete
  15. அரிய தகவலும் அழகிய படங்களும் மக்கா அடுத்த முறை கேரளா பயணத்தில் பார்த்துவிடுவோம்!

    ReplyDelete
  16. நானும் வந்திருக்கிறேன் அருமையான அரண்மனை.

    ReplyDelete
  17. //கன்னியாகுமரி மாவட்டம், பத்பனாபபுரம் அரண்மனை......அங்கே என்னய்யா இருக்கு என்று கிண்டல் பண்ணிய விஜயனே ஆச்சர்யமாகி விட்டார்,//

    400 வருஷமா ஒரு பாம்ம்ம்ம்..பு இருக்காம் அதுக்குள்ள ...
    சந்திரமுகி டயலாக்தான் நினைவுக்கு வருது ஹா..ஹா... :-)))

    ReplyDelete
  18. நல்லா இருக்கு

    ReplyDelete

கூடி வந்து கும்மியடிச்சிட்டு போங்க இல்லைன்னா நான் உங்க கனவுல வந்து கண்ணை குத்திருவேன்...

நம்ம பதிவுகள் தான்! தாராளமாக வந்து ஆராய்ச்சி பண்ணுங்க...!